எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்)
சி (பராமரிப்பு using AWB)
'''எஸ். என். லட்சுமி''' ([[1934]] - [[பெப்ரவரி 20]], [[2012]]) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. [[1948]] ஆம் ஆண்டில் [[சந்திரலேகா]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் [[கலைமாமணி]] பட்டம் பெற்றவர்.
 
[[விருதுநகர் மாவட்டம்]] , [[அருப்புக்கோட்டை வட்டம்]] சென்னல்குடி அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த<ref>http://epaper.dinakaran.com/pdf/2012/02/22/20120222a_004102006.htm எஸ்.என்.லட்சுமி உடல் சொந்த ஊரில் அடக்கம் </ref> எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , ''சரவணன் மீனாட்சி'' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
 
==இளமையும் வாழ்க்கையும்==
லட்சுமியின் தாய் பழனியம்மாள் எட்டு சிறுவர்களுடன் தனது சிற்றூரை விட்டு வெளியேறி [[விருதுநகர்|விருதுநகரில்]] வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மகன்கள் கல் உடைத்தும் மகள்கள் மாவரைத்தும் பிழைத்து வந்தார்கள். இந்நிலையில் வீட்டின் கடைசிப் பெண்ணான லட்சுமி குடும்பத்தைத் துறந்து நல்வாழ்க்கை தேடி சென்னைக்குப் பயணமானார்.<ref name='hindu'/> அங்கு மிகுந்த முயற்சிகளிடையே [[சந்திரலேகா]] திரைப்படத்தில் குழு நடனமொன்றில் பங்கேற்றார். அங்கிருந்து [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] வழிகாட்டுதலில் ''சேவா ஸ்டேஜ்'' நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் [[கே. பாலச்சந்தர்|கே. பாலச்சந்தரின்]] ''ராகினி ரிக்கிரியேசன்ஸ்'' நாடகக்குழுவில் இணைந்தார். [[1959]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[தாமரைக்குளம் (திரைப்படம்)|தாமரைக்குளம்]] திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் நுழைந்தார். [[பாக்தாத் திருடன்]] திரைப்படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் நடித்து துணிகரமானப் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.<ref name='hindu'/>
 
தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக்குழு உறுப்பினராகவும் மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.<ref name="hindu">[http://www.thehindu.com/arts/cinema/article2912927.ece [[மோகன் ராமன்|எம். வி. ராமன்]], ''An actor par excellence'', [[த இந்து]], பார்வையிடப்பட்டது:பெப்ரவரி 21, 2012]</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711605" இருந்து மீள்விக்கப்பட்டது