மதுபாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
மதுபாலா என்று புகழ்பெற்ற மும்தாஜ் பேகம் தேஹலவி 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி [[இந்தியா]]விலுள்ள [[புது தில்லி]]யில் பிறந்தார். அவர் ஒரு [[இஸ்லாமியர்]] என்பதுடன் பழமைவாத பதான் குடும்பத்தில் பிறந்த பதினொரு பேரில் ஐந்தாமவராவார்.
 
பெஷாவரில்<ref name="specials.rediff.com">http://specials.rediff.com/movies/2008/mar/25sd1.htm</ref> இருந்த இம்பீரியல் டொபாக்கோ கம்பெனியில் அவருடைய தந்தை வேலை இழந்தபிறகு, அந்தக் குடும்பம் மதுபாலாவின் நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களின் மரணம் உள்ளிட்ட பல சோதனைக் காலங்களையும் தாங்கிக்கொண்டிருந்தது. மதுபாலாவும் மற்ற நான்கு சகோதரிகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். வறுமையில் வீழ்ந்துவிட்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றும் அவரது தேடலில் அவரது தந்தை [[மும்பை]]க்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர்கள் பல வருடங்களாக போராடியதோடு வேலை தேடி [[மும்பை]] சினிமா ஸ்டுடியோக்களுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தனர். இளம் மும்தாஜ் தனது ஒன்பதாவது வயதில் சினிமாத்துறைக்குள் நுழைந்தார்.
வரிசை 43:
== ஒரு நட்சத்திரமாக மதுபாலா ==
 
''மஹல்'' திரைப்படத்தைத் தொடர்ந்து மதுபாலா பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரையும் பொருளாதார ரீதியாக காப்பாற்ற வேண்டிய நெருக்கடியால், முக்கிய பெண் கதாபாத்திரத்தில் அவர் நான்கு வருடங்களிலேயே இருபத்து நான்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். அதன் விளைவாக, மதுபாலாவின் அழகு அவருடைய நடிப்புத் திறனைவிட முனைப்பாக இருப்பதாக விமர்சகர்கள் விமர்சிப்பதற்கு காரணமாக அமைந்தது. இதன் ஒரு பகுதி திரைப்படக் கதாபாத்திரங்களைக் கவனமின்றி தேர்ந்தெடுத்ததும் காரணமாக அமைந்தது. அவருடைய குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பால் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது, கடுமையாக சமரசம் செய்துகொண்ட ஒரு நாடகீய நடிகை என்ற பெயருக்கு காரணமானது. இது குறித்து அவர் பின்னாளில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
 
சவாலான கதாபாத்திரங்களோடு மிகவும் கௌரவமான திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். பிமல் ராயின் ''பிரஜ் பஹூ'' (1954) இது குறிப்பிடப்படவேண்டிய ஒரு திரைப்படமாகும். மதுபாலா அந்த நாவலைப் படித்திருந்தாலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தைத் தவறவிடுவதாக இருந்தது. அவர் தன்னுடைய சந்தை மதிப்பு குறித்து குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது (அதிகமானவற்றுள் ஒன்று), பிமல் ராய் அவரை அலட்சியம் செய்துவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு போட்டியிட்ட காமினி குஷாலுக்கு சாதகமாக நடந்துகொண்டார். அந்தக் கதாபாத்திரத்தைத் தவறவிட்டதற்கு இதுதான் காரணம் என்பதை மதுபாலா கற்றுக்கொண்டபோது, தான் அந்தப் படத்தில் ஒரு [[ரூபாய்]] ஊதியத்தில் கூட நடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார். இதுதான் ஒரு தீவிர நடிகையாக தன்னுடைய பிம்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
 
ஒரு நட்சத்திரமாக, மதுபாலா திரைப்படத் துறையின் உச்சத்திற்கே சென்றார். அந்த நேரத்தில் அருடன் நடித்த மிகவும் பிரபல நடிகர்கள்: அசோக் குமார், [[ராஜ் கபூர்]], ரெஹ்மான், பிரதீப் குமார், ஷம்மி கபூர், திலீப் குமார், குரு தத் மற்றும் [[தேவ் ஆனந்த்]] ஆவர். மதுபாலா அதே சமயத்தில் காமினி கௌஷல், சுரையா, கீதா பாலி, நளினி ஜெய்வந்த் மற்றும் நிம்மி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடனும் நடித்திருக்கிறார். அவருடன் பணி புரிந்த திறமைமிக்க மற்றும் மரியாதைக்குரிய இயக்குநர்கள்: மெஹ்பூப் கான் (''அமர்'' ), குரு தத் (''மிஸ்டர். &amp; மிஸஸ். ''' ''55'' ), கமல் அம்ரோஹி (''மஹல்'' ) மற்றும் கே. அசிஃப் (''முகல்-ஏ-ஆஸம்'' ) ஆவர். அவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுடன் ''நாதா'' (1955) என்ற திரைப்படத்தைத் தயாரித்து அவரே நடித்தும் இருக்கிறார்.
வரிசை 56:
 
== சொந்த வாழ்க்கையும் பிரச்சினைக்குரிய நீதிமன்ற வழக்கும் ==
மதுபாலா நடிகரும் தொடர்ந்து அவர் படங்களில் நடித்தவருமான திலிப் குமாருடன் நீண்ட கால உறவு வைத்திருந்தார். அவர்கள் முதலில் ''ஜார் பதா'' (1944) படப்பிடிப்பு தளத்தில் முதல்முறையாக சந்தித்தனர், பின்னர் முடிக்கப்படாமலோ அல்லது வெளியிடப்படாமலோ போன ''ஹர் சிங்கார்'' (1949) திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். அவர்களுடைய திரைக்கு வெளியிலான உறவு இரண்டு வருடங்கள் கழித்து ''தரானா'' (1951) திரைப்படத்தில் தொடங்கியது. அவர்கள் நான்கு படங்களில் ஒன்றாக நடித்த பிரபலமான காதல் ஜோடிகளானார்கள்.
 
மதுபாலா தன்னை அதிகமும் வெளியில் காட்டிக்கொள்ளாதவராக இருந்தார், பொதுவிடத்தில் தோன்றியதில்லை (1954 இல் ''பஹுத் தின் ஹீவே '' திரைப்படத்தின் பிரத்யேக முதல் நாள் திரையிடலில் தோன்றியது மட்டும் ஒரு விதிவிலக்கு) என்பதோடு எப்போதாவதுதான் நேர்காணல் அளித்திருக்கிறார். திரைப்பட ஊடகம் அவருடைய சொந்த வாழ்க்கை மற்றும் காதல் உறவு குறித்து பலவாறாக யூகித்தபடி இருந்தது என்பதுடன் [[திலிப் குமார்]] தொடர்ச்சியாக குறிப்பிடப்படுபவராக இருந்தார். இந்த வதந்திகள் வெளிப்படையாகவும் மிக அரிதாகவும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து 1955ஆம் ஆண்டில் தோன்றியபோது உறுதியானது. எந்த வகையிலும் அவர் சம்பந்தப்படாத ''இன்சானியத்'' திரைப்படத்தின் முதல்நாள் பிரத்யேக திரையிடலுக்கு [[திலிப் குமார்]] பாதுகாவலாக வர மதுபாலா வருகைபுரிந்தார். இது ''பஹுத் தின் ஹீவே'' (1954) திரைப்படத்தில் நடிக்கும்போது தனது உடல்நலமின்மையை கவனித்துக்கொண்ட எஸ்.எஸ்.வாசனுக்கான நன்றி பாராட்டுதலின் மற்றொரு வகையாகப் பார்க்கப்பட்டது என்றாலும், அவர் இந்த நிகழ்ச்சியில் தோன்றியது மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியத்துவம் உடையதாக இருந்தது. அதிகாரப்பூர்வமான முறையில் திலிப் குமாரின் பாதுகாப்பி்ல் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அவர்கள் பொதுப்படையாக தங்களுடைய உறவை வெளிப்படுத்தினர்.
வரிசை 83:
== மதுபாலா ஒரு அடையாளம் ==
 
அவரது குறுகியகால வாழ்க்கையில் அவர் 70 படங்களில் நடித்திருந்தார். அவர் குறித்து பதிப்பிக்கப்பட்ட மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகளில் அவர் [[மர்லின் மன்றோ]]வோடு ஒப்பிடப்பட்டார் என்பதோடு அதேபோன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளத் தகுதியையும் பெற்றார். அவர் குணச்சித்திர பாத்திரங்கள் அல்லது துணைக் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் முன்னதாகவே இறந்துவிட்டதால், இதுநாள்வரை இந்திய சினிமாவில் அதிக நாள் நீடித்த மிகவும் புகழ்பெற்ற முன்னோடிகளுள் ஒருவராக இருக்கிறார் எனலாம். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறார்கள் என்பது மூவி மேகஸினால் 1990ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. மதுபாலா எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான ஹிந்தி நடிகையாக 58 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று, அவருடைய சமகால முன்னோடி நடிகைகளான மீனா குமாரி, நர்கிஸ் மற்றும் நூதன் ஆகியோரைவிட மேம்பட்டு நிற்கிறார். மிகச் சமீபத்தில் 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் சிறப்பு தினத்தில் rediff.com இல் (பார்க்க வெளிப்புற இணைப்புகள்)"மதுபாலா பாலிவுட்டின் சிறந்த நடிகைகள் வரிசையில் இரண்டாவது இடத்தில்" இருந்தார். அதன்படி, நடிகைகளின் பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது "...நடிப்புத் திறன், கவர்ச்சி, வசூல் வெற்றி, பலதிறன் மற்றும் அடையாளப்பூர்வமான தகுதிநிலை -- மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் சினிமாவின் புதிய அலையில் பாலிவுட்டிற்கான தலைமையிடத்தில் இருந்தனர்..."
 
அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்கின்றன என்பதோடு மதுபாலாவின் பெரும்பாலான டிவிடி மாற்றப் பணிகள் அவருடைய ரசிகர்களிடம் புத்துயிர்ப்பை உருவாக்கச் செய்தது. பல்வேறு காட்சிப்படங்கள் மற்றும் ரசிகர்கள் உருவாக்கிய இறுதியஞ்சலி படங்கள் [[யூடியூப்]] போன்ற பிரபலமான வீடியோ வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன. வேறு எந்த பழம் [[ஹிந்தி]] நடிகைக்கும் இதுபோன்ற பெரிய அளவிற்கான வீடியோக்கள் வீடியோ பகிர்வுத் தளங்களில் காணக்கிடைப்பதில்லை. இந்தியாவில், தெருவோர விற்பனையாளர்களும் கடைகளும் தற்கால [[ஹிந்தி]] சினிமா நட்சத்திரங்களோடு அவருடைய கறுப்பு வெள்ளை புகைப்படங்களையும் விளம்பர சுவரொட்டிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.
 
2004ஆம் ஆண்டில் முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் டிஜி்ட்டல் முறையில் வண்ணத்திற்கு மாற்றப்பட்ட பதிப்பு அவர் மரணமடைந்த 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது, இந்தத் திரைப்படம் மதுபாலாவை மீண்டும் ஒருமுறை முற்றிலும் வெற்றிகரமனவராக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 91:
கடந்த பத்தாண்டில், மதுபாலாவைக் குறித்து வெளிவந்துள்ள சில வாழ்க்கைச் சரிதங்கள் மற்றும் கட்டுரைகள் முன்பு அவர் குறித்து அறியப்படாமல் இருந்த சொந்த வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளிப்படுத்துகிறது. அதன்விளைவாக 2007ஆம் ஆண்டில் ஷினே அஹுஜா மற்றும் சோஹா அலி கான் நடித்த ''கோயா கோயா சாந்த்'' என்ற [[ஹிந்தி]] திரைப்படம் தயாரிக்கப்பட்டது - இதன் கதைக்கரு மதுபாலா மற்றும் பிற பழங்கால திரைப்பட ஆளுமைகளின் வாழ்க்கையை மேலோட்டமாக அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.
 
2008 ஆம் ஆண்டில் மதுபாலா உருவம் பொதித்த நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நடிகையின் உருவம் பொதித்த குறைவான பதிப்புக்களாக இந்திய அஞ்சல்துறையால் இந்த தபால்தலை தயாரிக்கப்பட்டது. இது உடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் மதுபாலா குடும்பத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நடிகர்கள் நிம்மி மற்றும் மனோஜ் குமார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இந்த கௌரவத்தைப் பெற்ற மற்றொரு ஒரே இந்திய சினிமா நடிகை நர்கிஸ் தத் ஆவார்.
 
1970களின் பிரபலமான நடிகையும் கவர்ச்சிக் குறியீடுமான [[ஜீனத் அமன்]] தொடர்ந்து நவீன மற்றும் மேற்கத்திய மயமான [[ஹிந்தி]] திரைப்பட கதாநாயகியாக குறிப்பிடப்படுகிறார். 1950களின் முற்பகுதியில் மதுபாலா மேற்கத்திய மயமான கவர்ச்சியானவர் போன்ற கதாபாத்திரம் உள்ளவராகவும் சித்திரிக்கப்படுபவராக மேலோட்டமாக பார்க்கப்படுகிறது. அடக்கமான மற்றும் சுய தியாகம் செய்யும் இலட்சிய இந்தியப் பெண்ணே ஒழுங்குமுறையாக இருந்த அந்தக் காலத்தில் மிகவும் துணிச்சலான பெண்களாக [[ஹிந்தி]] திரைப்பட கதாநாயகிகள் சித்தரிக்கப்பட்டனர். இன்றும் நீடித்து வருகின்ற நவீன [[ஹிந்தி]] நடிகைகளின் மீதான முன்னோடியான அந்த தாக்கம், மதுபாலாவால் (ஓரளவிற்கு அவருடைய சமகாலத்தவரான நர்கீஸாலும்) ஏற்படுத்தப்பட்டதாகும்.
வரிசை 99:
 
* மதுபாலா குழந்தையாக இருக்கையில், ஒரு பெருமதிப்பு மிக்க இஸ்லாமிய ஆன்மிகவாதி அவர் புகழும் செல்வமும் பெறுவார் என்றும், ஆனால் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நடத்தி இளம் வயதிலேயே இறந்துவிடுவார் என்றும் முன்னதாகவே கூறியிருந்தார்.{{Citation needed|date=August 2009}}
 
* பட இயக்குநரான மோகன் சின்ஹா மதுபாலாவிற்கு 12 வயதாகும்போதே அவருக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்.
* அவர் ஹாலிவுட்டின் தீவிர ரசிகை என்பதுடன் ஆங்கிலத்தை சரளமாகப் பேச கற்றுக்கொண்ட பின்னர் தன்னுடைய வீட்டு புரஜக்டரில் தொடர்ந்து அமெரிக்கத் திரைப்படங்களைப் பார்த்தார்.
* படபடப்பாக இருக்கையில் அவரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு புன்னகைக்கவும் வெடித்துச் சிரிக்கவும் செய்வார், இது சிலசமயங்களில் உடன் நடிப்பவர்களையும் இயக்குநர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கும்.
* குருதத் முதலில் தன்னுடைய காவியத் திரைப்படமான ''பியாஸா'' வை (1957) அறிவித்தபோது மதுபாலாவும் நர்கீஸூம்தான் பெண் முன்னணிக் கதாபாத்திரத்திற்கு இருந்தவர்கள். இந்தப் பகுதிகள் ஏறத்தாழ திரைப்பட நட்சத்திரங்களான மாலா சின்ஹா மற்றும் வஹீதா ரஹ்மானால் நடிக்கப்பட்டது.
* ''மிஸ்டர். &amp; மிஸஸ். '55'' இல் (1955) கீதா தத் விதிவிலக்கு தவிர்த்து மதுபாலாவின் பெரும்பாலான நினைவுகூறத்தக்க பாடல்கள் [[லதா மங்கேஷ்கர்]] அல்லது [[ஆஷா போஸ்லே]]வால் பின்னணி பாடப்பட்டன. மதுபாலா இவர்கள் இரண்டு பேராலும் அதிர்ஷ்டம் செய்தவராக கருதினார். 1949ஆம் ஆண்டில் மதுபாலாவைக் காட்சிப்படுத்திய ''மஹல்'' பாடல்கள் லதாவின் தொடக்கால வெற்றிகளாகும்; ஒன்பது வருடங்கள் கழித்து, 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நடிகையின் நான்கு திரைப்படப் பாடல்களுக்கான ஆஷாவின் பாடல்கள் அவரை தன்னுடைய சொந்த சகோதரி லதாவுக்கு போட்டியாளராக முக்கியமான பின்னணிப் பாடகியாக நிறுத்தியது.
* மதுபாலாவின் சகோதரியான சான்சலும் ஒரு நடிகை என்பதோடு அவருடைய புகழ்பெற்ற உடன்பிறப்பின் சாயலோடு அவர் சலிப்பேற்படுத்தினார். அவர் மதுபாலாவுடன் ''நஸ்னீன்'' (1951), ''நாதா'' (1955), ''மஹோலன் கா க்வாப்'' (1960) மற்றும் ''ஜூம்ரோ'' (1961) ஆகிய திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார். அவரும் மெஹ்பூப் கானின் ''மதர் இண்டியா'' (1957) மற்றும் ராஜ் கபூரின் ''ஜிஸ் டேஷ் மேன் கங்கா பேதி ஹை'' (1960) ஆகிய திரைப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
 
வரி 344 ⟶ 338:
{{reflist}}
 
'''புத்தகங்கள் & திரைப்பட பத்திரிக்கைகள்:'''
 
* அக்பர், கதீஜா. ''மதுபாலா:ஹர் லைஃப், ஹர் ஃபிலிம்ஸ்'' (ஆங்கிலம்). நியூ டெல்லி: யுபிஎஸ் பப்ளிஷர்ஸ், டிஸ்ட்ரிபூட்டர்ஸ், 1997. {{ISBN|0-553-09673-7}}.
"https://ta.wikipedia.org/wiki/மதுபாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது