செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 45:
 
==ஆரம்ப வாழ்க்கை==
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[உரும்பிராய்|உரும்பிராயை]]ச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் [[யாழ் பரி யோவான் கல்லூரி|பரி யோவான் கல்லூரி]], [[கொழும்பு]] புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், [[1914]] ஆம் ஆண்டில் [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின்]] பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், [[இந்தியக் குடிமைப் பணி]]யில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு [[ஆனந்தா கல்லூரி]] அதிபராகவும், [[கொழும்பு பல்கலைக்கழகம்|கொழும்பு பல்கலைக்கழகத்தில்]] கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார்.
 
சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கள். [[செ. நாகலிங்கம்]], இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் [[மகாதேசாதிபதி (இலங்கை)|மகாதேசாதிபதி]]யாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர்.
வரிசை 54:
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வவுனியா தேர்தல் தொகுதி|வவுனியா]]வில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவானார்.<ref name="pe47">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1947.pdf|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref> அன்றைய [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறித்த சர்ச்சைக்குரிய [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம்|இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு]] ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய [[இலங்கை பிரதமர்]] [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க|டி. எசு. சேனநாயக்கா]] இவரது நடத்தை குறித்துக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
 
1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து சுந்தரலிங்கம் மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றாமல் இருந்ததால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.<ref name="EK">{{cite news | title=சி. சுந்தரலிங்கம் பதவியிழப்பு | work=ஈழகேசரி | date=23 செப்டம்பர் 1951 | accessdate=23 செப்டம்பர் 2018}}</ref> இதையடுத்து 1951 அக்டோபர் 31 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="BE">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.<ref name="pe52">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1952.pdf|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref> இலங்கையில் [[தனிச் சிங்களச் சட்டம்]] கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="BE"/> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="pe56">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1956.pdf|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
 
1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழ்ர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்சு]] தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு [[தா. சிவசிதம்பரம்]] என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.<ref name="pe60m">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-03-19.pdf|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
 
1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் ''Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents'' என்ற நூலை வெளியிட்டு தனித் [[தமிழீழம்]] கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref>{{cite web|title=The Prophesy of Mr. C. Suntheralingham|url=http://www.sangam.org/ANALYSIS/CSuntha12_20_63.htm|publisher=Ilankai Tamil Sangam}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/செ._சுந்தரலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது