எம். ஆர். கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎நாடக வாழ்வில்: பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
==நாடக வாழ்வில்==
1959 இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலிருந்து]] வந்த எம். என். இராஜரத்தினம் பிள்ளை பிரபல எழுத்தாளர் [[அரு. இராமநாதன்]] எழுதிய "அசோகன் காதலி' என்ற நாவலைத் தழுவி "இளவரசன்' என்ற பெயரில் நாடகத்தைத் தயாரித்தார். இதுவே கலைச்செல்வனின் முதல் நாடகமாகும். இந்நாடகம் 1959 ஆம் ஆண்டு [[பொரளை]] வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் மேடையேறியது. 'மனோரஞ்சித கானசபாவில் சேர்ந்து கலைச்செல்வன் நடிப்பு, பாட்டு, வாத்தியக் கருவி இயக்குதல் போன்றவற்றை நன்கு கற்று "மலர்ந்த வாழ்வு" என்ற நாடகத்தில் ஒரு துணைப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து "மரணத்தின் மடியிலே' என்ற நாடகத்திற்கு கலைச்செல்வன் கதை எழுதினார். அவர் தந்தையார் கே.எம்.எஸ். பிள்ளை நடித்தார்.
 
கலைச்செல்வனின் அற்புதமான நடிப்பையும் ஆற்றலையும் வியந்து நடிகவேள் [[லடிஸ் வீரமணி]] தன்னுடைய நாடகங்களில் இவரை நடிக்க வைத்தார்.
 
கலைச்செல்வன் [[இலங்கை வானொலி]]யிலும் நாடகங்களை எழுதி குரலொலிக் கலைஞராகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு "எதனைக் கண்டான்' என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் நடித்தும் காட்டினார். அதன் பின்னர் "புயலில் ஒரு மலர்' "நீதியின் நிழல்', "எதிர் நீச்சல்' ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கலைச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது