தொலெமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 170 இறப்புகள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
| occupation = [[கணிதவியலாளர்]], புவியியலாளர், [[வானியல் வல்லுநர்]], [[சோதிடம்|சோதிடர்]]
|}}
'''தொலெமி''' அல்லது '''தாலமி''' (''Ptolemy'', {{IPAc-en|ˈ|t|ɒ|l|ə|m|i}}) என்று பொதுவாக அழைக்கப்படும், '''குளோடியஸ் தொலெமாயெஸ்''' (Claudius Ptolemaeus, {{lang-el|Κλαύδιος Πτολεμαῖος}}, {{lang-la|Claudius Ptolemaeus}}; {{nowrap|{{circa}} கிபி 90 –}} {{circa}} 168) ஒரு [[புவியியல்|புவியியலாளரும்]], வானியலாளரும், [[சோதிடம்|சோதிடரும்]] ஆவார். இவர் [[கிரேக்க மொழி]] பேசியவர். ரோமரின் கீழிருந்த [[எகிப்து|எகிப்தில்]], கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும். இவருடைய குடும்பப் பின்னணி பற்றியோ, உருவ அமைப்புப் பற்றியோ, விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் எகிப்தில் பிறந்தவர் என்பதே பலரது கருத்தாகும்.
 
தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய [[அறிவியல்]] தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய [[அல்மாகெஸ்ட்]] (Almagest) என்பதாகும். அல்மாகெஸ்ட் என்பது கிரேக்க மொழியில் ''பெரு நூல்'' ("The Great Treatise") எனப் பொருள்படும். அடுத்தது, ''ஜியோகிரஃபியா'' என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, [[கிரேக்கர்]]களும், [[ரோமர்]]களும் அறிந்திருந்த [[தொலமியின் உலகப்படம்|புவியியல் பற்றிய முழுமையான விளக்க]] நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். ''நான்கு நூல்கள்'' என்ற பொருள் தரும் ''டெட்ராபிப்லோஸ்'' என்பதே நூலின் பெயர். இதிலே [[ஜாதகம்]] முதல் [[அரிஸ்ட்டாட்டில்|அரிஸ்ட்டாட்டிலின்]] இயற்கைத் தத்துவம் வரை எடுத்தாண்டுள்ளார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2712826" இருந்து மீள்விக்கப்பட்டது