பித்தாகரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 16:
}}
 
'''பித்தாகரசு''' ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், [[பித்தாகரியனியம்]] என்னும் [[மத இயக்கம்]] ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். ஆனால், சிலர் இவரது [[கணிதம்]], [[மெய்யியல்]] ஆகியவற்றுக்கான பங்களிப்புக் குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர். [[எரோடோட்டசு]], இவரை கிரேக்கர்களுள் மிகத் தகுதி வாய்ந்த [[மெய்யியலாளர்]] எனப் புகழ்ந்துள்ளார். பித்தாகரசின் கேட்பாடுகள் பின்னாளில் வந்த [[பிளாட்டோ]]வின் கோட்பாடுகளிலும் கிடைக்கப்படுகின்றன.
 
இவர், அவரது பெயரைக்கொண்டு பெயரிடப்பட்ட [[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரசு தேற்றத்துக்காக]] மிகவும் அறியப்பட்டவர். இவர் ''எண்களின் தந்தை'' எனவும் அழைக்கப்படுகிறார். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவர் மெய்யியல், மதம் பரப்பல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது வாழ்க்கை, இவரது கருத்துக்கள் என்பன பற்றி மிகவும் குறைவாகவே தெரிய வந்துள்ளது. பித்தாகரசும் அவரது மாணவர்களும் எல்லாக் கருத்துருக்களும் கணிதத்துடன் தொடர்புள்ளவை என்றும், எண்களே இறுதி உண்மை என்றும், கணிதத்தினூடாக, எல்லாவற்றையும் எதிர்வுகூறவும், அளக்கவும் முடியும் எனவும் நம்பினர்.
வரிசை 24:
==பித்தாகரசின் வாழ்க்கை==
[[File:Pythagoras Bust Vatican Museum.jpg|thumb|200px|வாட்டிகன் அருங்காட்சியகத்தில் உள்ள பித்தாகரஸின் சிலை]]
[[எரோடோட்டசு]], இசொகிரேட்சு போன்ற ஆரம்ப எழுத்தாளர்கள் அனைவரும் பிதாகரஸ் கிரேக்கம் தீவான கிழக்கு ஏகனில் உள்ள சமோஸில் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பித்தாகரசின் தந்தை ஒரு வியாபாரியாக இருந்திப்பார் அல்லது மாணிக்கம் செதுக்குபவராக இருந்திருப்பார் என்று அவர்கள் கருதுகின்றனர். இவரின் நெசார்க்கசின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.<ref>Herodotus, iv. 95, Isocrates, ''Busiris'', 28–9; Later writers called him a Tyrrhenian or Phliasian, and gave Marmacus, or Demaratus, as the name of his father, Diogenes Laërtius, viii. 1; Porphyry, ''Vit. Pyth.'' 1, 2; Justin, xx. 4; Pausanias, ii. 13.</ref> இவர் கி.மு.540 இல் பிறந்து இருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
சில கூற்றுகளின்படி பித்தாகரஸ் க்ரோடான் இன பெண்ணான தியானோவை திருமணம் செய்துகொண்டார் எனவும் திலக்ஸ் என்ற மகனும் தாமோ, அரிக்னோட், மையா என மூன்று மகள்கள்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வரிசை 40:
 
==எழுத்துக்கள்==
பித்தாகரசின் தொகுதிகள் யாவும் கிடைக்கப் பெறவில்லை. பெரும்பாலும் அனைத்தும் அழிந்து விட்டன.ஏனெனில் அவர் தனது கற்பித்தல்களை வாய்மொழியாகவே கற்பித்தார். கிடைத்த சிலவும் அவர் கூறுவதாக சொல்லப்படுகின்றவையே.
 
==பித்தாகரஸ் தேற்றம்==
{{முதன்மை|பித்தேகோரசு தேற்றம்}}
[[File:Pythagorean.svg|thumb|'''பித்தாகரசு தேற்றம்''': செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் மீது (''a'' மற்றும் ''b'') வரையப்பட்டும் சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல் செம்பக்கத்தின் மீது வரையப்படும் (''c'') சதுரத்தின் பரப்பளவுக்குச் சமம்.]]
[[File:Pythag anim.gif|right |thumb|பித்தாகரஸ் தேற்றத்தின் நிறுவல்]]
 
கணிதம் கற்றவர்கள் [[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரஸ் தேற்றம்]] என்பது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். ஒரு [[முக்கோணம்]] என்பது மூன்று பக்கங்கள் ஆன ஒரு கணித வடிவம் ஆகும். [[செங்கோண முக்கோணம்]] என்பது ஒரு கோணத்தின் அளவு, 90 [[பாகை (அலகு)|பாகையாகக்]] கொண்டதொரு முக்கோணம்.
வரிசை 52:
எடுத்துக்காட்டாக 9-இன் வர்க்கம் 9 x9 = 81 என்பதாகும். ஆனால், வர்க்கமூலம் என்பது அதற்கு நேர்மாறானது. அதாவது எண் 81-க்கு வர்க்கமூலம் 9.
 
ஒரு செங்கோண முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கும். அவை அடிப்பக்கம். குத்துயரம் மற்றும் [[செம்பக்கம்|கர்ணம்]] என்பனவாகும். அடிப்பக்கத்திற்கும், குத்துயரத்திற்கும் இடைப்பட்ட கோணம் செங்கோணமாக இருக்க வேண்டும். அதாவது 90 பாகையாக இருக்க வேண்டும். முக்கோணம் பற்றிய பித்தாகரஸ் தேற்றம் உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ளது.
 
''பித்தாகரஸ் தேற்றத்தின் கூற்று'':
வரிசை 60:
பித்தாகரஸ் தேற்றத்தின்படி ஒரு செங்கோண முக்கோணத்தில்,
 
கர்ணத்தின் வர்க்கம் = அடிப்பக்கத்தின் வர்க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.
 
அதாவது ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் அளவுகள்: 6 செமீ; 8செமீ, கர்ணத்தின் அளவு 10 செமீ எனில்:
வரிசை 86:
 
==வெளி இணைப்புக்கள்==
 
 
http://taaism.com/bothaiyanaar-alternative-to-pythagorean-theorem/
"https://ta.wikipedia.org/wiki/பித்தாகரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது