ஈன்றிக் வொன் இசுட்டீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
 
[[படிமம்:Georg Barlösius Heinrich von Stephan.jpg|thumb|ஈன்றிக் வொன் இசுட்டீபன்]]
[[படிமம்:Stamp of Moldova 180.gif|thumb|மோல்டோவா வெளியிட்ட அஞ்சல்தலை]]
'''ஐன்றிக் வொன் இசுட்டீபன்''' ({{lang-de|Ernst Heinrich Wilhelm Stephan}}, {{lang-en|Heinrich von Stephan}} சனவரி 7, 1831 - ஏப்ரல் 8, 1897) [[செருமானியப் பேரரசு|செருமன் பேரரசின்]] பொது அஞ்சல் இயக்குனராகப் பதவி வகித்தவர். செருமனியின் [[அஞ்சல் சேவை]]யை ஒழுங்கமைத்தவர் இவரே. 1874 ஆம் ஆண்டில் [[அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்|அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தை]] நிறுவுவதிலும் பெரும்பங்கு இவருக்கு உண்டு. 1877 ஆம் ஆண்டில் செருமனியில் [[தொலைபேசி]]ச் சேவையை இவர் அறிமுகப்படுத்தினார்.<ref> ஆண்டன் ஹூர்தமான் (2003) ''தொலைதொடர்புகளின் உலகளாவிய வரலாறு'' {{ஆ}} வைலி-ஐஇஇஇ, நியூ யார்க், [http://books.google.com/books?id=SnjGRDVIUL4C&pg=PA169 பக்கங்கள் 169&ndash;171], {{ISBN|0-471-20505-2}}</ref>
 
===பிறப்பு===
இசுட்டீபன் [[புருசிய இராச்சியம்|பிரசிய இராச்சியத்தின்]] [[பொமெரேனியா]]வில் உள்ள [[இசுட்டால்ப்]] (Stolp) என்னும் இடத்தில் 1831 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏழாம் தேதி பிறந்தார்.
 
===பொறுப்புகள்===
1849 ஆம் ஆண்டில் இவர் பிரசிய அஞ்சல் சேவையில், உள்ளூர் அஞ்சல் அலுவலராகப் பணியில் சேர்ந்தார். 1866 ஆம் ஆண்டில், நீண்டகாலமாகத் தனியாரால் நடத்தப்பட்டு வந்த அஞ்சல் சேவையை அரசுடமை ஆக்குவதற்கான திட்டத்துக்குப் பொறுப்பாக இவர் அரசினால் நியமிக்கப்பட்டார். 1870ல் [[வட செருமன் கூட்டமைப்பு]]க்கான அஞ்சல்சேவை இயக்குனராக நியமிக்கப்பட்டர். தொடர்ந்து வேகமாகப் பல பதவி உயர்வுகள் இவரை நாடி வந்தன.
 
1876 ஆம் ஆண்டில் பிரசியப் பேரரசின் அஞ்சல்துறைத் தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்ட இவர், 1880ல் அஞ்சல் சேவைகளுக்குப் பொறுப்பான நேருதவிச் செயலர் ஆனார். 1895 ஆம் ஆண்டில் செருமனியின் அஞ்சல் சேவைகள் அமைச்சராகப் பதவியேற்றார்.
 
===பணிகள்===
தொடக்கத்தில் இசுட்டீபன் அஞ்சல் சேவைப் பணியாளராக இருந்த காலத்தில், செருமனி 17 பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. இவற்றின் அஞ்சல் சேவைகள் தனித்தனியான கொள்கைகளைக் கொண்டிருந்ததோடு கட்டணங்களும் வெவ்வேறாக இருந்தன. முதலில், அஞ்சல்கள் அனுப்புவதை இலகுவாக்குவதற்காக, செருமனி முழுவதற்கும் ஒரே கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்தினார்.
 
அஞ்சல் சேவையைத் தரப்படுத்துவதும், அனைத்துலக மட்டத்தில் ஒழுங்கமைப்பதும் இவரது இலக்குகளாக இருந்தன. இந்த முயற்சியில், செருமனியின் அஞ்சல், தொலைபேசிச் சேவைகளை ஒன்றிணைத்ததுடன், 1874ல், [[பேர்ன்]] நகரில் நடந்த [[பன்னாட்டு அஞ்சல் மாநாடு|பன்னாட்டு அஞ்சல் மாநாட்டை]] ஒழுங்கு செய்வதிலும் முன்னின்று உழைத்தார். இந்த மாநாட்டிலேயே [[அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்]] நிறுவப்பட்டது. 1865 ஆம் ஆண்டிலேயே, செருமனியில் [[அஞ்சலட்டை|தபால் அட்டையை]] அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் இவரது முன்மொழிவை இவர் 1870ல் அஞ்சல் சேவைகள் இயக்குனராகப் பதவியேற்ற பின்னரே நடைமுறைப்படுத்தினர்.
 
1870 - 71 காலகட்டத்தில் நடைபெற்ற பிரான்சு-பிரசியப் போர்க்காலத்தில், களத்தில் இருந்த படைப்பிரிவுகளிடையே தொடர்புகளுக்கான ஒரு வழியாக அஞ்சல் அட்டைகள் பரவலாகப் பயன்பட்டன. செருமனியில் தொலைபேசியை அறிமுகப் படுத்தியமைக்காகவும் இவரை மக்கள் நினைவுகூருகின்றனர்.
 
தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவை ஆகிய துறைகளில் தூய [[செருமன் மொழி]]க் [[கலைச்சொல்|கலைச்சொற்களை]] உருவாக்குவதிலும் இவர் முனைப்பாகச் செயல்பட்டார். இதன் பின்னரே தொலைபேசி, [[அஞ்சல் தலை|அஞ்சல்தலை]], முகவரி போன்றவற்றுக்கான தூய [[செருமன் மொழி]]ச் சொற்கள் கிடைத்தன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சொற்கள் இசுட்டீபனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1870களில் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.
 
===இறப்பு===
உலக அளவில் அஞ்சல் சேவையையைத் தரப்படுத்துவதில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்திய இசுட்டீபன் 1897 ஆம் ஆண்டு பெர்லினில் காலமானார்.
 
===குறிப்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/ஈன்றிக்_வொன்_இசுட்டீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது