டிரிஃக்லெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[படிமம்:Peter Gustav Lejeune Dirichlet.jpg|thumb|250px|right|யோஃகான் பிட்டர் குஸ்ட்டாஃவ் லெயூன் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet)]]
 
'''டிரிஃக்லெ''' (Dirichlet, [diʀiˈkle] ) (1805-1859) 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர். அவருடைய முழுப்பெயர் '''யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ'''(Johann Peter Gustav Lejeune Dirichlet).
 
==இளமைப்படிப்பு==
 
டிரிஃக்லெ [[ஜெர்மனி]]யில் டியூரென் இல் பிறந்தார். அவர் தந்தை ஓர் அஞ்சல் அலுவலகத் தலைவர்.[[பெல்ஜிய]]த்தில் ரிச்லெட் நகரிலிருந்து வந்த குடும்பமானதால் அவருக்கு செல்லப் பெயர் 'லாழ்ஜூன் டிரிஃக்லெ'.பெற்றோர்கள் அவரை வியாபாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோதிலும் சிறுவயதிலேயே கணிதத்தில் ஆர்வத்தைத் தெரியப்படுத்தியவர். '[[ஓம் விதி]]'(Ohm's Law) என்று இயற்பியலில் புகழ்பெற்ற [[ஜார்ஜ் ஸைமன் ஓம்]] (George Simon Ohm) (1787-1854)கோலோனில் அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். 1821 இல் தன் பள்ளிப் படிப்பை முடித்தபோது [[பாரிஸ்]] நகர் உலகமறிந்த கணித இயலர்களைப் பெற்றிருந்ததாலும் அங்கு அவருடைய உறவினர்கள் இருந்ததாலும் அங்கு போய் ஜெனெரல் ஃபாய் என்ற ஒரு பண்புள்ளவரின் குடும்பத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகத் தொழில் புரிந்து தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். அவ்வில்லத்தில் அவருக்கு பல பெரிய மனிதர்களையும் அறிவாளிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
==காஸ், லெஜாண்டர், ஃபொரியர்==
 
இக்காலத்தில் தான் அவர் [[கார்ல் ப்ரெடெரிக் காஸ்|காஸ்]] இனுடைய 'எண்கணித உரைகள்' என்ற பெரும் நூலைப் படிக்கும் பேறு பெற்றார். அச்சமயம் அந்நூலை முழுதும் கற்றறிந்தவர் சிலரே இருந்தனர். டிரிஃக்லெ அந்நூலின் ஒரு கிழிந்த படியை (பிரதியை) தன்னுடன் எப்பொழுதும், ஏன், தான் பயணங்களில் இருந்தபோதும் கூட, வைத்திருந்தாராம். கடினமான அந்நூலை பிற்காலத்தியவர் படித்துப் புரிந்துகொள்வதற்காகக் கடுமையாக உழைத்தவர் டிரிஃக்லெ. [[பாரிஸ் அகாடெமி]] க்கு அவர் அனுப்பிய முதல் ஆய்வுக்கட்டுரை [[எண் கோட்பாட்டைப்]] பற்றியதுதான். அக்கட்டுரையைத் தரம் பார்த்து வெளியிட அனுமதித்தது [[லெஜாண்டர்]]. இதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதே லெஜாண்டரின் ஒரு [[யூகத்]]திற்கு டிரிஃக்லெ நிறுவல் கொடுத்தார். ஆனால் அப்பொழுது லெஜாண்டர் காலமாகியிருந்தார்.
 
[[ஃபொரியர்]] (1768-1830) -- [[இயற்பியலி]]ல் [[வெப்பக்கோட்பாட்டு]]ப் பிரிவுக்கு வித்திட்டவர் -- டிரிஃக்லெயின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தார். டிரிஃக்லெயை [[கணித இயற்பியலில்]] ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டிரிஃக்லெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது