ஜுனைத் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
சி →‎சர்வதேச போட்டிகள்: பராமரிப்பு using AWB
வரிசை 118:
பின் இரண்டு நாட்கள் கழித்து முகம்மது சல்மான் மற்றும் ஹம்மத் அசாம் ஆகியோருடன் இணைந்து [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். பின் [[வகாப் ரியாஸ்|வகாப் ரியாசுடன்]] இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 10 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.<ref>{{citation|title=ODI no. 3152 Pakistan in West Indies ODI Series&nbsp;– 1st ODI: West Indies v Pakistan|url=http://www.espncricinfo.com/ci/engine/match/489213.html|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref> இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 3-2 எனும் கணக்கில் வென்றது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜுனைத் கான் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இவர் நான்காவது இடம் பிடித்தார். [[மார்லன் சாமுவேல்சு|மார்லன் சாமுவேல்சின்]] இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.<ref>{{citation|title=Records/Pakistan in West Indies ODI Series, 2011/Most wickets|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6342;type=series|publisher=ESPNcricinfo|accessdate=12 July 2011}}</ref>
 
மே மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது. இந்தத் தொடரின் 15 பேர்கொண்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்றார். <ref>{{citation|title=Junaid Khan stars in easy Pakistan win|date=1 June 2016|url=http://www.espncricinfo.com/ireland/content/story/516999.html|publisher=ESPNCricinfo|accessdate=3 June 2011}}</ref> இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதிலதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்டுவீச்சாளர்களில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 6 இலக்குகளை 10.83 எனும் சராசரியில் வீழ்த்தினார்.<ref>{{citation|title=Records/Pakistan in Ireland ODI Series, 2011/Most wickets|url=http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=6532;type=series|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref><ref>{{citation|last=Siggins|first=Ger|title=What lies ahead for Ireland?|date=31 May 2011|url=http://www.espncricinfo.com/ireland/content/story/517307.html|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2016}}</ref>
 
பின் பாக்கித்தானிய அணி [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக மூன்று [[தேர்வுத் துடுப்பாட்டம்]], ஐந்து [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் ஒரு [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியது. இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மட்டையாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதிலும் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.<ref>{{citation|last=Purohit|first=Abhishek|title=Junaid's five-for caps Pakistan's day|date=18 October 2011|url=http://www.espncricinfo.com/pakistan-v-sri-lanka-2011/content/story/536908.html|publisher=Cricinfo|accessdate=1 June 2016}}</ref> பின் இரண்டாவது தேர்வுப் போட்டி சமனில் முடிந்தது.இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜுனைத்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது