இழான் பியர் சோவாழ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 4:
'''இழான் பியர் சோவாழ்சு''' (Jean-Pierre Sauvage) (பிறப்பு அக்டோபர் 21, 1944) ஓர் பிரான்சிய வேதியியல் ஆய்வாளர். இவர் பிரான்சில் இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். தனி அணுக்கள் மூலக்கூறுகளைத் தாண்டி மூலக்கூறுகளுக்கிடையே நிலவக்கூடிய மெலிவான விசைகளைக் கொண்டு மூலக்கூறுகளால் அமைக்கக்கூடிய [[ஒருங்கியம்]] குறித்து நுண்ணிய மூலக்கூறு இயந்திர அமைப்புகள் பற்றிய துறையில் ஆய்வு செய்கின்றார். இவருடைய ஆய்வுகளுக்காக 2016 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசு இவருக்கும் அமெரிக்கராகிய [[பிரேசர் இசுட்டோடார்ட்டு]] (Fraser Stoddart) என்பாருக்கும் இடச்சு ஆய்வாளர் [[பென் பெரிங்கா]] (Bernard L. Feringa) என்பாருக்கும் வழங்கப்பெற்றது.
 
சோவாழ்சு பாரீசு நகரில் அக்டோபர் 21, 1944 இல் பிறந்தார். [[இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகம்|இலூயி பாசுச்சர் பல்கலைக்கழகத்தில்]] [[இழான் மாரீ இலேன்]] (Jean-Marie Lehn) வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். முனைவர்ப்பட்ட ஆய்வில் முதன்முறையாக கிறிப்டாண்டு எனக் குறிக்கப்பெறும் [[பல்லீந்தணைவி]]களை உருவாக்கிக் காட்டினார்<ref>B. Dietrich, J. M. Lehn, J. P. Sauvage, "Les Cryptates" Tetrahedron Letters, 1969, Volume 10, Issue 34, Pages 2889-2892.{{DOI|10.1016/S0040-4039(01)88300-3}}</ref>. இழான் மாரீ இலேன் இத்துறையில் வல்லுனர். இவர் 1987 இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்.
 
சோவாழ்சு நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்றவர். மின்வேதிய முறையில் கரிம ஈராக்சைடு (கார்பன்-டை-ஆக்சைடு, CO<sub>2</sub>) சிதைவு, ஒளிச்சேர்க்கை வினைய நடுவம் (photosynthetic reaction center)<ref>Collin, J. P. and Sauvage, J. P., "Electrochemical reduction of carbon dioxide mediated by molecular catalysts", Coord. Chem. Rev., 1989, 93, 245-268. {{DOI|10.1016/0010-8545(89)80018-9}}</ref> ஆகிய துறைகளில் ஆய்வு செய்திருக்கின்றார். மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இயந்திரவகையாக பிணையும் விதமாக அமைப்பது பற்றியும் நிறைய ஆய்வு செய்திருக்கின்றார். கயிற்றில் முடிச்சுகள் போடுவதுபோல மூலக்கூறுகளில் முடிச்சுகள் போல அமைக்கும் விதங்களையும் ஆய்வு செய்திருக்கின்றார்<ref>Dietrich-Buchecker, C.; Jimenez-Molero, M. C.; Sartor, V. and Sauvage, J.-P., "Rotaxanes and catenanes as prototypes of molecular machines and motors", Pure and Applied Chemistry, 2003, volume 75, pp. 1383-1393.</ref>. மூலக்கூற்று முடிச்சுகளை நாட்டேன் (knotane) என்றும் குறிக்கப்பெறுகின்றது.
 
பிரான்சிய அறிவியல் அக்காதெமியில் மார்ச்சு 26, 1990 அன்று தொடர்புகொள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார், பின்னர் நவம்பர் 24, 1987 இல் உறுப்பினராக உயர்ந்தார். இவர் தற்பொழுது இசுற்றாசுபூர்கு பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்றப் பேராசிரியராக இருக்கின்றார்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/இழான்_பியர்_சோவாழ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது