பல்சாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1850 இறப்புகள்
சி →‎படைப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 35:
 
* 1829 - 'எஞ்சியுள்ள குடிகேடன்' -LE DERNIER CHOUHAN., 'திருமணத்தின் உடற்கூறு (LA PHYSIOLOGIE DU MARRIAGE)', 'கீர்த்தியும் கேடும்' ( GLOIRE ET MALHEUR),
 
* 1830ல் - கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக 'அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),.
 
* 1831 'துயர் குறைக்கும் தோலாடை'(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து "உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங்கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும்" என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது.
 
வரி 43 ⟶ 41:
 
* 1832 - நாட்டுப்புற வைத்தியன் (Le Medecin de Campagne)
 
* 1834 - லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l'absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட 'பாதிரியார் கொரிஓ' (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம்.
 
* 1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா? ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம்மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி 'LA COMEDIE HUMAINE'.
 
"https://ta.wikipedia.org/wiki/பல்சாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது