"ஆஸ்கார் வைல்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
(Oscar_Wilde_Signature.svg)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== பிறப்பும், இளமைக் காலமும் ==
இவர் [[டப்ளின்|டப்ளினில்]], 21 வெஸ்ட்லண்ட் ரோவைச் சேர்ந்த [[ஆங்கில-ஐரியர்|ஆங்கில-ஐரியக்]] குடும்பம் ஒன்றில் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் சர். [[வில்லியம் வைல்ட்]], தாயார் [[ஜேன் பிரான்சிஸ்கா வைல்ட்]]. ஜேன் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர், இவர் 1848 ஆம் ஆண்டில் புரட்சிகர இயக்கமாக விளங்கிய [[இளம் அயர்லாந்து|இளம் அயர்லாந்தின்]] கவிஞராகவும் விளங்கியதுடன் வாழ்நாள் முழுதும் ஐரியத் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். வில்லியம் வைல்ட், புகழ் பெற்ற காது, கண் மருத்துவராக விளங்கியதுடன், அவரது [[மருத்துவம்|மருத்துவ]] சேவைக்காக 1864 இல் பிரபுப் பட்டமும் பெற்றுக்கொண்டார். வில்லியம் [[தொல்லியல்]], [[நாட்டாரியல்]] தொடர்பிலும் நூல்கள் எழுதியுள்ளார். வில்லியம் ஒரு பெயர்பெற்ற வள்ளலும் ஆவார்.
 
ஆஸ்கார், அவருக்கு ஒன்பது வயதாகும் வரை வீட்டிலேயே கல்வி கற்றார். பின்னர் பதினாறு வயது வரை என்னிஸ்கிலன், ஃபெர்மனாக் என்னும் இடத்திலுள்ள [[போர்ட்டோரா ராயல் பள்ளி]]யில் கல்வி கற்றார். போர்ட்டோராவில் படிப்பை முடித்துக் கொண்டதும் டப்ளினில் உள்ள [[டிரினிட்டிக் கல்லூரி, டப்ளின்|டிரினிட்டிக் கல்லூரி]]யில் 1871 ஆம் ஆண்டிலிருந்து 1874 ஆம் ஆண்டு வரை இலக்கியம் பயின்றார். அங்கே ஆஸ்கார் ஒரு தலைசிறந்த மாணவனாக விளங்கினார். அவருக்கு பேர்க்லே தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் [[மக்தலன் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்|மக்தலன் கல்லூரி]]யில் படிப்பதற்காக ஆஸ்காருக்குப் [[புலமைப்பரிசு]]ம் கிடைத்தது. அங்கே 1874 தொடக்கம் 1878 வரை பயின்றார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2714987" இருந்து மீள்விக்கப்பட்டது