"கி. விட்டால் ராவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
{{Refimprove|date=திசம்பர் 2018}}
{{Infobox person
| name = கி. விட்டால் ராவ் </br /> Vittal Rao, K.
| image = Vittal Rao, K..jpg|
| caption = விட்டால் கிருட்டிண ராவ்
== வாழ்க்கை வரலாறு ==
=== வாழ்க்கை ===
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்த பழைய சேலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரத்தில் விட்டல் ராவ் பிறந்தார். கிருட்டிண ராவ் சரசுவதி தம்பதியருக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் விட்டால் ராவ் ஆறாவது குழந்தையாவார். 1960 ஆம் ஆண்டில் ஒரு கதிர்வீச்சு நிபுணராக இசுடான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன்பு வரை சேலத்தில் தனது குழந்தை பருவத்தையும் பதின்பருவ வயது நாட்களையும் கழித்தார். மருத்துவமனையில் பணியாற்றிய காலத்தில் அவர் கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இதனால் ஊக்கம்பெற்று அப்போது சென்னையிலிருந்த புகழ்பெற்ற அரசு நுண்கலைக் கல்லூரியில் (முன்னதாக இது மெட்ராசு கலைக்கல்லூரி என்று அழைக்கப்பட்டது) சேர்ந்து படித்தார். 1963 ஆம் ஆண்டு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து 2002 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து பணிபுரிந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கு பணியாற்றும்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் இலக்கியம் மற்றும் நுண்கலைகள் மீதிருந்த தனிப்பட்ட ஆர்வத்தை அவரால் தொடர முடிந்தது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகேயிருந்த மூர் மார்கெட்டில் உலாவச் செல்வது அவருக்கு விருப்பமான பொழுது போக்காக மாறியது. இலக்கியம் மற்றும் கலை தொடர்பான பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனைக்குக் கிடைத்தன. அவற்றின் மீதெல்லாம் ஆர்வம் கொண்ட ராவ் பேரம் பேசி வாங்கிச்சென்று படித்தார்.
 
=== எழுத்துப் பணி ===
இவருடைய முதல் சிறுகதை 1967 இல் புகழ் பெற்ற வார இதழான ஆனந்த விகடனில் பிரசுரமானது. அதன் பின்னர் இவருடைய இலக்கிய படைப்புகள் அனைத்து பிரபல இதழ்களிலும் இலக்கிய சிற்றிதழ்களிலும் வெளிவர ஆரம்பித்தன.
 
1976 ஆம் ஆண்டில் வெளிவந்த போக்கிடம் என்ற இவருடைய நாவலுக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு சிறந்த நாவல் என்ற பரிசை வழங்கியது. இதைத்தொடர்ந்து இலக்கிய உலகம் ராவை கவனிக்கத் தொடங்கியது. இதுவரை ஒன்பது நாவல்கள் , நூறு பெரிய மற்றும் சிறிய என நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய நான்கு தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பேசுவதென்றால் 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த நதிமூலம் பற்றி கூறியாக வேண்டும். மாதவன் என்ற பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. சமுதாயத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் மற்றும் இயக்கங்களை இணைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது. இக்கதை தனி மனித வாழ்க்கையில் தொடர்புடைய சமூக சக்திகள் உண்டாக்கும் பல்வேறு வகையான மாற்றங்களை உள்ளடக்கிய பெரிய மற்றும் சிக்கலான ஒரு திரைக்கதையாகும். இக்கதையில் பிண்ணப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மையான வரலாற்று செய்திகளாக இருக்கின்றன. தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான கதையாக இது கருதப்படுகிறது. தனிமனித வாழ்க்கையைப் படிக்கின்ற அதே வேளையில் சமுதாயத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களையும் இக்கதையிலிருந்து அறியமுடிகிறது.
== நூற்பட்டியல் ==
=== நாவல்கள் ===
•இன்னொரு தாஜ்மகால் -1974 </br />
•போக்கிடம் - 1976 </br />
•தூறல் - 1976 </br />
•நதிமூலம் - 1981 </br />
•மற்றவர்கள் - 1992 </br />
•மீண்டும் அவளுக்காக - 1993 </br />
•காலவெளி - 1993 </br />
•வண்ண முகங்கள் - 1994 </br />
•காம்ரேடுகள் – 1996
 
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715067" இருந்து மீள்விக்கப்பட்டது