மு. அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
நாகை மாவட்டத்தில்(முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம். தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, [[குற்றாலம்]] ([[திருத்துருத்தி]]) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் [[சிதம்பரம்]] மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். [[சென்னை]]யில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, [[காசி இந்துப் பல்கலைக்கழகம்|காசி இந்துப் பல்கலைக்கழகத்தில்]] இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் [[முத்தையா செட்டியார்]] அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக [[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்]] அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
 
[[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சமஸ்கிருதம்]] ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற அருணாசலம் இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று கொண்டவர்.[[ மு. வரதராசனார்]], [[கா.சு.பிள்ளை]], [[உ.வே.சாமிநாதன்]], [[வையாபுரிப்பிள்ளை]], [[திரு.வி.கலியாணசுந்தரம்.]], [[ரசிகமணி டி.கே.சி]], [[வெ.சாமிநாத சர்மா]], [[கல்கி]], [[வ.ரா.]], [[கருத்திருமன்]] போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பணியேற்ற தத்துவமேதை ராதாகிருஷ்ணனோடும் பழகியுள்ளார்.<ref name="மு.அருணாசலம்">{{cite web | url=http://www.dinamani.com/editorial_articles/article954197.ece?service=print | title=அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம் | publisher=தினமணி | date=Aug 16, 2009 | accessdate=ஏப்ரல் 10, 2015 | author=முனைவர் தெ.ஞானசுந்தரம்}}</ref>
 
இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் ""அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை'' என்று எழுதியுள்ளார். இவர் பத்திரிகையாசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
வரிசை 15:
 
== இசை ஆய்வு ==
மு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாறு பற்றிய இரண்டு ஆய்வு நூல்களைமிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. மு. அருணாசலனார் இந்த இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார்.<ref name="மு.அருணாசலனார் நூற்றாண்டு">{{cite web | url=http://muelangovan.blogspot.in/2010/01/blog-post_07.html | title=அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா | publisher=முனைவர் மு.இளங்கோவன் | date=வியாழன், 7 ஜனவரி, 2010 | accessdate=ஏப்ரல் 10, 2015 | author=முனைவர் மு.இளங்கோவன்}}</ref> <ref name="ஞானாலயா">{{cite web | url=http://www.gnanalaya-tamil.com/2012/09/blog-post_13.html | title=அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம் | publisher=ஞானாலயா | date=செப்டம்பர் 13, 2012 | accessdate=ஏப்ரல் 10, 2015 | author=ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி}}</ref>
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக விளங்குகின்றன. “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தை சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.<ref name="மு.அருணாசலனார்">{{cite web | url=http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/2011/12397-2011-01-12-10-28-09 | title=தமிழ்மொழி வழங்கிய இசைச் செல்வம் | publisher=கீற்று | date=12 ஜனவரி 2011 | accessdate=ஏப்ரல் 10, 2015 | author=தமிழண்ணல்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மு._அருணாசலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது