மேற்கு சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎முடிவு: பராமரிப்பு using AWB
 
வரிசை 18:
 
==முடிவு==
பீசா எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் 1414-இல் கூட்டப்பட்ட [[காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்]] இப்பிளவிற்கு முடிவுகட்ட முயன்றது. இதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் [[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி]]யின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக [[திருத்தந்தையின் பணி துறப்பு|பணி துறக்கக்]] கோரப்பட்டது. இதை திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஏற்றனர். ஆனாலும் அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது. ஆயினும் இச்சங்கத்தில் திருத்தந்தை பதவியினைக்கோரிய மூவரில் யார் உண்மையான வாரிசாக இருந்தனர் என முடிவெடுக்காததால் இக்காலத்தின் உண்மையான திருத்தந்தை யார் என்பதில் சிக்கல் 19ஆம் நூற்றாண்டுவரை நிலவியது.
 
பின்னாட்களில் [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பயஸ்]], ஒருவர் திருத்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாத வண்ணம் தடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது