லின்டன் பி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 71:
'''லின்டன் பெய்ன்சு ஜான்சன்''' (''Lyndon Baines Johnson'', ஆகத்து 27, 1908 - சனவரி 22, 1973), பெரும்பாலும் '''LBJ''' என்ற அவரது முதலெழுத்துகளால் அறியப்படும் 1963 முதல் 1969 வரை [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|36வது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவராக]] பதவியிலிருந்த அமெரிக்க அரசியல்வாதி. 1961 முதல் 1963 வரை ஐக்கிய அமெரிக்காவின் 37வது துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தவர். [[டெக்சஸ்|டெக்சசிலிருந்து]] [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சியின்]] சார்பாளராக [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்க கீழவையில்]] தேர்ந்தெடுக்கப்பட்டவர். தவிரவும் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] பெரும்பான்மைக் கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கூட்டரசின் அனைத்து (நான்கு) தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளிலும் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்களில் ஜான்சன் ஒருவராவார்.{{efn|குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை, மேலவை இரண்டிலும் பதவி வகித்த மற்ற மூவர் ஜான் டைலர், அன்ட்ரூ ஜான்சன், [[ரிச்சர்ட் நிக்சன்]] ஆவர்.}}
==இளமையும் அரசியல் துவக்கமும்==
டெக்சசின் இசுடோன்வாலில் பண்ணைவீட்டில் பிறந்த ஜான்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக பேராய உதவியாளராக பணியாற்றியுள்ளார். 1937இல் ஐக்கிய அமெரிக்க மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1948இல் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951இல் மேலவை பெரும்பான்மை கொறடாவாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1953இல் மேலவை சிறுபான்மைத் தலைவராகவும் 1955இல் மேலவை பெரும்பான்மை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். <ref>{{cite web|title=American Experience: LBJ|url=https://www.pbs.org/wgbh/americanexperience/features/bonus-video/presidents-age-lbj/|publisher=WGBH and PBS|accessdate=16 November 2013|year=2013}}</ref> மேலவையில் பணியாற்றியபோது அவரது அடக்கியாள்கின்ற ஆளுமைக்காகவும் சட்டங்களை நிறைவேற்ற செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளை வலுக்கட்டாயப்படுத்தும் "ஜான்சன் செய்முறைக்காகவும்" அறியப்பட்டார்.
 
==குடியரசுத் தலைவர் தேர்தல்கள் 1961/1964==
1960 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட முன்வேட்பு கட்சித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறாத நிலையில், வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட [[மாசச்சூசெட்ஸ்]] செனட்டர் [[ஜான் எஃப். கென்னடி]] தேர்தல் கூட்டாளியாக இருக்க சம்மதித்தார். இருவரும் 1961ஆம் ஆண்டுத் தேர்தலில் முறையே [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியின்]] [[ரிச்சர்ட் நிக்சன்|நிக்சனையும்]] என்றி கபோட்டையும் வென்றனர். ஜான்சன் துணைக் குடியரசுத் தலைவராக சனவரி 20, 1961இல் பதவியேற்றார். 1963ஆம் ஆண்டில் நவம்பர் 22 அன்று கென்னடி [[டாலஸ்|டாலசில்]] கொல்லப்பட அரசுத்தலைவர் வாரிசுவரிசையில் அடுத்திருந்த ஜான்சன் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டில், 1964, குடியரசுத் தலைவர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் [[அரிசோனா]]வின் [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை உறுப்பினர்]] பேரி கோல்டுவாட்டரைத் தோற்கடித்தார். ஜான்சனுக்கு 61.1% வாக்குகள் கிடைத்தன. 1820க்குப் பிறகு குடியரசுத் தேர்தலில் இவ்வளவு உயர்ந்த விழுக்காடு வாக்குகளைப் பெற்றவர் வேறெவருமிலர்.
==குடியரசுத் தலைவர் பணியில்==
ஜான்சன் "ஏழ்மை மீதான போர்" தொடுத்தார். மக்களின் வாழ்தரம் மேம்பாட்டிற்காக பல அரசுத் திட்டங்களை முன்னெடுத்தார். ''அருமையான சமூகம்'' எனப் பெயரிடப்பட்ட திட்டங்களின் கீழ் ஏழ்மையை குறைக்கவும் இன வேறுபாட்டை அழிக்கவுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பொதுப் பரப்புரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மூத்தோருக்கான மருத்துவக் காப்பீடு, ஏழைகளுக்கு மருத்துவ உதவி ஆகியன அடங்கும். ஆபிரிக்க அமெரிக்கர்களின் குடிசார் உரிமைகளுக்கு ஆதரவளித்தார். கென்னடியின் பாதையில் தொடர்ந்து பயணித்து அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அரசுகள் மறுக்கவியலாதவாறு 1965இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கென்னடியால் முடியாத சட்டங்களுக்கும் ஜான்சனால் சக உறுப்பினர்களை வலியுறுத்தி சம்மதம் பெற முடிந்தது.
 
அதே நேரம் ஜான்சன் வியத்நாம் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கூட்டினார். அவரது பணிக்காலத்தில் 16000 துருப்புகளிலிருந்து 500,000ஆக உயர்ந்தது. இதனால் மக்களிடையே புகழ் மங்கியது. போரின் தீவிரமும் கூடி வந்தது. 1968இல் 1000 அமெரிக்க இளைஞர்கள் இப்போரில் உயிரிழந்தும் எதிரிகளை வெல்ல முடியவில்லை. எனவே மார்ச் மாதத்தில் தான் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு நிற்கப்போவதில்லை என அறிவித்தார்.
வரிசை 93:
* [http://www.whitehouse.gov/about/presidents/lyndonbjohnson லின்டன் பி. ஜான்சனின் வெள்ளை மாளிகை வாழ்க்கைவரலாறு]
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லின்டன்_பி._ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது