அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''அப்பைய தீட்சிதர்''' (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த [[அத்வைதம் |அத்வைத]] வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் [[இலக்கியம்|இலக்கியத்திலும்]] வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் [[காசி]] வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான [[கர்ம யோகம்|கருமம்]], [[பக்தி யோகம்|பக்தி]], [[ஆத்ம ஞானம்]] இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.
 
==பிறப்பும் இளமைக்காலமும்==
வரிசை 18:
==அத்வைதியா, சிவாத்வைதியா?==
 
அவருடைய மனதிற்குள் அத்வைதம்தான் கடைநிலை உண்மை. ஆனாலும் அவருடைய தொழுகையெல்லாம் சிவனைக்குறித்தே இருந்தது. சிவாத்வைதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவரையும் தங்களில் ஒருவராகத்தான் நினைத்தார்கள். அதனால் அவருடைய மனதிற்குகந்த மதம் சிவாத்வைதமா, அத்வைதமா என்று தீர்மானமாகச் சொல்வது கடினம் என்பது உலக வழக்கு. சிவாத்வைதம் என்பது விஷ்ணுவுக்கு பதில் சிவனைக் கொள்ளவேண்டுமே தவிர மற்றபடி இராமானுஜருடைய விசிஷ்டாத்வைதம் போலத்தான்.
 
==''சித்தாந்தலேச சங்கிரகம்''==
 
அப்பைய தீட்சிதரின் வேதாந்த நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ''சித்தாந்த-லேச-சங்கிரகம்'' என்ற அவருடைய சொந்தப் படைப்பு. இப்பெரிய நூலில் அத்வைத சித்தாந்தத்தின் எல்லா நெளிவு சுளுவுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறார். பாஷ்யங்களைப் படிக்கத் தொடங்கும் அத்வைத மாணவர்கள் யாவரும் இன்று இந்நூலில் தான் தொடங்குவார்கள். அத்வைதத்தினுள்ளே இருக்கும் பல பிரிவுகளின் கொள்கைகளும் இதனில் அலசப்பட்டு விடுகின்றன. ஏக-ஜீவ-வாதம், நாநாஜீவ-வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்துவ-வாதம் முதலிய எல்லாமே விவரிக்கப்பட்டு அவைகளின் எதிர்வாதங்களும் தீட்சிதரின் அறிவுச் சாணையில் தீட்டப்பட்டு விடுகின்றன. அகிலமும் சம்மதம் என்பது போல் அவரே அந்த பரந்த நோக்கை நியாயப்படுத்தி விடுகிறார்: “உலகெல்லாம் மாயை என்பதை எல்லா அத்வைதிகளும் ஒப்புக்கொள்வதால், அம்மாய உலகத்திற்கு இவர்கள் வெவ்வேறு படங்கள் வரைவதினால் என்ன குறை வந்துவிடப் போகிறது?”
 
==பரிமளம்==
வரிசை 45:
 
==துணை நூல்கள்==
* N. Ramesan, Sri Appayya Dikshita 1972; Srimad Appayya Dikshitendra Granthavaliu Prakashana Samithi, Hyderabad, India
 
* {{cite journal
| quotes =
வரி 74 ⟶ 73:
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
 
 
 
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அப்பைய_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது