குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் [[பீகார்|பீகாரில்]] [[பாட்னா|பாட்னாவில்]] பிறந்தவர். இவரது தாய் [[மாதா குஜ்ரி]] ஆவார்<ref>{{cite web|title=Destinations :: Patna|url=http://bstdc.bih.nic.in/Patna.htm}}</ref>. இவரது தந்தை அஸ்ஸாம் மாநிலத்திற்கு மதத்தைப் பரப்ப சென்ற போது இவர் பிறந்தார்.
 
தனது தாயார் மற்றும் தாய் வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே கோவிந்த் சிங் தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார்.ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக்கொண்டு இருந்த போது,நவாப் யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்கச் சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள் என்று கூறினார்.<ref name="issuu.com">[http://issuu.com/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 10,11]</ref>
 
===பாட்னாவிலிருந்து வெளியேற காரணமான சம்பவம்===
வழக்கமான தனது குறும்புச் செயல் போல, ஒருநாள் குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணின் குடத்தை உடைக்க முயன்ற போது,கல் தவறுதலாக அவரது நெற்றியில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு முகமதிய பெண்மணி. மகனின் செயலைக் கண்ட கோவிந்த் சிங்கின் தாயார் உடனடியாக வந்து கடுமையாக கண்டித்தார். தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தனது தவறுக்கு வருந்துவதாகவும் கோவிந்த் தெரிவித்தார். அதற்கு தாயார், ’நீ என்ன செய்திருக்கிறாய்? வெளியாட்களின் ஆட்சியில் நாம் இருப்பது தெரியாதா? இதில் அந்த மதத்தினர் காயம் பட்டது மன்னருக்குத் தெரிந்தால் நமக்கு அழிவு காலம் வரும்’ என்று வருந்தினார்.இந்த பாகுபாட்டைக் கேட்ட கோவிந்த் சிங் கோபம் கொண்டார்.தாய் மற்றும் பாட்டியாரின் சமாதான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல், உறுதியோடு ’இந்த நாட்டில் இனியும் இருக்க மாட்டேன். எனது தந்தையின் நாட்டுக்குச் செல்வேன்’ என்று கூறி பஞ்சாப் சென்றார்.<ref>[http:// name="issuu.com"/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 10,11]</ref>
 
டெல்லி சிறையிலிருந்த தமது தந்தை குருதேக் பகதூர்க்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங். தமது மகனின் மீது நம்பிக்கை கொண்ட தந்தை ஒரு இளநீரையும் சில நாணயங்களையும் தமது குருசக்தியை மகனுக்கு தருவதின் சங்கல்பமாக நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார்.<ref name="வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12">[http://issuu.com/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12]</ref>
 
[[1675]] முதல் இறப்பு வரை [[சீக்கியம்|சீக்கியரின்]] குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்.<ref>முனைவர் பெ.சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,பக்கம் 161</ref>."நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல" என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார்.<ref>[http://issuu.com/srkmath/docs/the_vedanta_kesari_july_2012 name="வேதாந்த கேசரி; ஜீலை 2012; பக்கம் 12]<"/ref> இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.
 
1685 , ஏப்ரல் மாதம் இவர் [[சிர்மௌர் மாவட்டம்|சிர்மௌர் மாவட்டத்திற்கு]]க் குடிபெயர்ந்தார். இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார்<ref name=" Mata Sundari ">{{cite web | url=http://www.Sikh-Heritage.co.uk/Personalities/SikhWomen/ProSikhWomen.htm | title=Prominent Sikh Women | publisher= | author= | date= | accessdate=2011-07-30}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=amDuB0HDv5QC&pg=PA103&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=The A to Z of Sikhism|author=W. H. McLeod|publisher=Scarecrow Press|ISBN=0-8108-6828-8}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA417&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=Encyclopedia of Hinduism|author=Constance Jones, James D. Ryan|publisher=Facts on File|ISBN=0-8160-5458-4}}</ref><ref name="SAO">{{cite book | url=http://books.google.com/books?id=osnkLKPMWykC&pg=PA144&dq=guru+gobind+singh+%22three+wives%22#v=onepage&q=guru%20gobind%20singh%20%22three%20wives%22&f=false | title=Sikhism Origin and Development|publisher=Atlantic Publishers & Distributors | author=Dalbir Singh Dhillon|year=1988 | accessdate=2011-07-30}}</ref>. 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான இடங்களையும் நிறுவினார்.
வரிசை 52:
===மத குரு===
சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங் அகற்றினார். அவருக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான 'தஸ' எனும் பாகத்தை இவரே எழுதினார்.ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர்,பகவதி தீவார், ராம் அவதார்,துர்க ஸப்தஸதி ஆகிய இந்து நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார்.
 
”1698 ஆம் ஆண்டில் பச்சிட்டார் நாடக்” எனும் தன் வரலாற்று நூலை எழுதிய இவர் 1699 ஆம் ஆண்டில் சாதி, மத, இன மற்றும் பால்வழிப் பாகுபாடுகளையும் பிரித்து ஆள்வதையும் முடிவுக்குக் கொண்டு வர “கால்சா” எனும் அமைப்பை நிறுவினார்.
வரிசை 68:
:*கிர்ப்பான்-(குத்துவாள்)தன்னையும் மற்ற மக்களையும் பாதுகாக்க,
:*கச்-(அரைக்காற்சட்டை)ஒரு நல்ல வாழ்க்கை வாழ,
:*கர-(எஃகு காப்பு) நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்ட
 
[[File:Keshgarh Sahib Gurudwara at Anandpur Sahib.jpg|thumb|160px|கல்ஸவின் பிறப்பிடம்]]
 
[[File:An inscription naming the five members of the Khalsa Panth, Takht Sri Keshgarh Sahib.jpg|thumb|200px|கல்ஸவின் பிறப்பிடம்]]
 
ஐந்தும் முறையே தியாகம்,தூய்மை,ஆன்ம சுத்தி,புலனடக்கம்,நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார்.
வரி 94 ⟶ 93:
* ''[http://www.sridasam.org Dasam Granth]'', the collection of writings attributed to Guru Gobind Singh
{{சீக்கிய குருக்கள்}}
 
[[பகுப்பு:சீக்கிய குருக்கள்]]
[[பகுப்பு:1666 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது