பதேசிங் (சீக்கியத் தலைவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎துவக்க காலங்கள்: *விரிவாக்கம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 74:
சூலை 1962இல் அகாலிதளத்தின் முக்கியத் தலைவர் [[மாஸ்டர் தாரா சிங்]]குடன் முரண்பட்ட பதேசிங் பிரிந்துசென்று புதிய அகாலிதளம் கட்சியைத் துவக்கினார். அக்டோபர் 2, 1962இல் அவரது கட்சி [[சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு]]த் தேர்தல்களில் வெற்றிபெற்று அதன் கட்டுப்பாட்டை பெற்றது. சனவரி 17, 1965இல் நடந்த தேர்தல்களில் தாராசிங்கின் கட்சி 45 இடங்களில் மட்டுமே வெற்றிபெற, பதேசிங்கின் கட்சி 90 இடங்களைப் பெற்றது.
 
நேருவுடனான சில சந்திப்புகளில் முன்னேற்றம் காணாதநிலையில் ஆகத்து 16, 1965இல் மீண்டும் சாகும்வரை உண்ணாநோன்பு மற்றும் தீக்குளித்தல் போராட்டங்களை அறிவித்தார். இருப்பினும் [[இந்திய-பாகிஸ்தான் போர், 1965|இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் போர்]] மூண்டதால், தனது போராட்டங்களைத் தளிவைத்ததுடன் தனது கட்சியினரை அரசுக்குத் துணை நிற்குமாறு வலியுறுத்தினார்.
 
போர் முடிவுற்றதும் பஞ்சாபி சுபா கோரிக்கைகளை பரிசீலிக்க [[இந்திரா காந்தி]], மகாவீர் தியாகி, யசுவந்த்ராவ் சவான் அடங்கிய குழுவை [[இந்திய அரசு]] நியமித்தது; பதேசிங்கின் கோரிக்கையை ஏற்று [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] அவைத்தலைவர் [[சர்தார் உக்கம் சிங்]] தலைமையில் அமைந்த நாடாளுமன்ற கலந்தாய்வுக் குழுவும் அதே கோரிக்கையை பரிசீலிக்க நியமித்தனர். பஞ்சாப் மாநிலத்தை மொழிவாரியாகப் பிரிக்கப் பரிந்துரைத்து உக்கம்சிங்கின் குழு தனது அறிக்கையை சனவரி 18, 1966 அன்று வெளியிட்டது. [[லால் பகதூர் சாஸ்திரி]]யின் மரணத்திற்கு பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி பஞ்சாபி சுபா கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். செப்டம்பர் 3, 1966 இல் பஞ்சாப் சீரமைப்பு சட்டவரைவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பஞ்சாப் மாநிலம் நவம்பர் 1, 1966இல் செயற்பாட்டிற்கு வந்தது.
 
இருப்பினும், [[சண்டிகர்|சண்டிகரும்]] ஏனைய சில பஞ்சாபி பேசும் பகுதிகளும் புதிய மாநிலத்தில் சேர்க்கப்படாததால் பதேசிங் ஏமாற்றமடைந்தார். திசம்பர் 17, 1966இல் மீண்டும் உண்ணோநோன்பை துவங்குவதாகவும் திசம்பர் 27, 1966 அன்று தீக்குளிக்கப் போவதாகவும் எச்சரித்தார். உக்கம் சிங்கும் அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் கியானி குர்முக் சிங் முசாபிரும் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.
 
1960களில் பஞ்சாப் அரசியலில் பதேசிங்கின் தாக்கம் மங்கத் தொடங்கியது. சண்டிகரை இணைக்க வேண்டி மீண்டும் 1970ஆம் ஆண்டு சனவரி 26 அன்று உண்ணாநோன்பிருக்கத் தொடங்கினார்; சனவரி 30 அன்று போராட்டத்தைக் கைவிட்டார். மார்ச் 25, 1972இல் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
வரிசை 86:
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சீக்கிய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பதேசிங்_(சீக்கியத்_தலைவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது