"பொன். சிவகுமாரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==மாணவர் பேரவையில் இணைவு==
இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். [[1970கள்|1970களின்]] தொடக்கத்தில் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 
==தாக்குதல்கள்==
[[1971]] ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த [[அல்பிரட் துரையப்பா]]வுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல் என்று கருதப்படுகிறது.
 
அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.
 
[[1973]] இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, [[அனுராதபுரம்]] சிறையிலே அடைக்கப்பட்டு [[மல்லாகம்]] நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்றன.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716945" இருந்து மீள்விக்கப்பட்டது