ஏஞ்சலா லேன்சுபரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
|}}
 
'''டேம் ஏஞ்சலா பிரிஜித் லேன்ச்பியூரி (Dame Angela Brigid Lansbury''' (பிறப்பு [[அக்டோபர் 16]], [[1925]]) என்பவர் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] - [[அயர்லாந்து]] [[நடிகை]] ஆவார். இவர் [[திரைப்படம்]], [[தொலைக்காட்சி நாடகத் தொடர்]], [[நாடகத் திரைப்படம்]] போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)]], [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகரும்]] ஆவார். இவர் ஏழு தசாப்தங்களாக நடித்துக்கொண்டிருந்தார். இவற்றில் பெரும்பான்மையானவை அமெரிக்கத் திரைப்படங்களாகும். இவரின் நடிப்பிற்காக சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்தது.
 
இவர் மத்திய [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் [[தந்தை]] எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு [[அரசியல்வாதி]] ஆவார். இவரின் [[தாய்]] மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த [[நடிகை]] ஆவார். [[தி பிளிட்ஸ்|தி பிளிட்ஸ்சில்]] இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் [[1940]] ஆம் ஆண்டில் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] சென்றார். பின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] நடிப்பு பயின்றார். [[1942]] ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் [[1944]] ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் [[1945]] இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் [[அகாதமி விருது]] மற்றும் [[கோல்டன் குளோப் விருது]] ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. [[1950கள்|1950களில்]] குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். [[1962]] இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{IMDb name|1450}}
 
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717039" இருந்து மீள்விக்கப்பட்டது