சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 46:
 
===கல்வி===
சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909ல் இடம்பெற்ற மெட்ரிக்குலேசன் பரீட்சையில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909ல் [[சென்னை கிறித்தவக் கல்லூரி]]யில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் [[சைதாப்பேட்டை]]யில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.<ref>Sarada Ranganathan Endowment for Library Science, ''Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5'', Bangalore, 1994. பக். VI.</ref>
 
===திருமணமும் குடும்ப வாழ்க்கையும்===
வரிசை 52:
 
==தொழில்==
கல்வியை முடித்துக்கொண்ட அரங்கநாதன், [[மங்களூர்]], [[கோயம்புத்தூர்]] ஆகிய இடங்களில் இருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் மதராசு பிரெசிடென்சி கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். ஆசிரியத் தொழிலில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனாலும், வருமானம் போதியதாக இருக்கவில்லை.
 
===நூலகர்===
தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராசுப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924 சனவரியில் [[மதராசுப் பல்கலைக்கழகம்|மதராசுப் பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் கிடைத்தது. இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சிக் கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார்.
 
9 மாதங்கள் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்ற அரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். அக்காலத்தில் மதராசுப் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட அரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார்.
வரிசை 64:
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.ilaindia.net/About%20Dr.%20S.%20R.%20Ranganathan-ILA.html இந்தியாவில் நூலகவியலின் தந்தை] - அரங்கநாதன் தொடர்பிலான தகவல்களும் வளங்களும். {{ஆ}}
* [https://tamil.thehindu.com/general/education/article24615919.ece நாடு நலம் பெற வந்த நூலகர்!] அரங்கநாதன் குறித்த கட்டுரை, இந்து தமிழ் இதழ், 2018, ஆகத்து 7
 
[[பகுப்பு:நூலகவியலாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நூலகவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது