கள்ளில் ஆத்திரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''கள்ளில் ஆத்திரையனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. 175, 389 எண் கொண்ட இவரது புறநானூற்றுப் பாடல்கள் ஆதனுங்கன் என்னும் வள்ளலைப் போற்றுகின்றன. குறுந்தொகை 293 எண் கொண்ட இவரது பாடலில் ஆதி அருமன் என்னும் மன்னன் குறிப்பிடப்பட்டுள்ளான். இவரது குறுந்தொகைப் பாடல் ''கள்ளில்'' என்னும் சொல்லுடன் தொடங்குகிறது. இதனால் இந்தப் புலவர் கள்ளில் என்னும் அடைமொழி பெற்றார் ஆதல் கூடும். அல்லது கள்ளில் என்னும் ஊரினர் ஆதலும் கூடும்.
==குறுந்தொகை 293==
குளத்தில் பூத்த ஆம்பலால் செய்த தழையாடை இடையிடையே விலகி கால் தொடை தெரியுமாறு உடுத்திக்கொண்டு கொழுநனைக் காண்பதற்கு அவள் (பரத்தை) அவ்வப்போது வருவாள். (அவள் முன்) நான் எளியவள் – என்கிறாள் அவன் மனைவி. அரசன் ஆதி அருமன் நாட்டில் கள்ளைத் தந்து உறவினர்க்கு ஊட்டிய பனைமரம் பின்னர் நுங்கு தந்து உதவும். அதுபோல அவள் ஊட்ட வருவாளே! என்று மனைவி கூறுகிறாள். இப்படி இவரது இந்தப் பாடல் தெரிவிக்கிறது. <ref>
<poem>கள்ளின்(ல்) கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
வரிசை 13:
 
==புறநானூறு 175==
ஆதனுங்கன் சிறந்த வள்ளல்களில் ஒருவன். இவனது வள்ளண்மையைப் பாடும் பாடல் இது.
 
ஆதனுங்கனை இவர் 'அறத்துறை' என்கிறார். நீர்த்துறை அனைவருக்கும் பயன்படும். அதுபோல இவன் அறத்துறை அனைவருக்கும் பயன்படும்.
 
'எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நின்(னைக்) காண்குவரே. நின்(னை) யான் மறப்பின், மறக்குங்காலை என் உயிர் யாக்கையிற் பிரியும். (எப்)பொழுதும் என்(னை) யான் மறப்பின் மறக்குவென்' என்று நெஞ்சுருகப் பாராட்டுகிறார்.
வரிசை 26:
 
==புறநானூறு 389==
இந்தப் பாடலில் [[ஆதனுங்கன்]] பாராட்டப்பட்டுள்ளான். புலவர் இந்தப் பாடலில் 'ஆதனுங்கன் போல நீயும் ... நன்கலம் நல்குமதி' என்று பாடுகிறார். பாடலில் [[வேங்கடங் கிழவோன்]] [[முதியன்]] என்பவனிடம் புலவர் பரிசில் வேண்டுவது தெளிவாக உள்ளது.
 
கோடை என்பது நுங்கின் கண்ணைத் தோண்டி நுங்கு உண்ணும் காலம். வேம்பு காய்க்கும் காலம். இத்தகைய கோடைகாலக் காலை வேளையில் புலவர் தன்னை நினைக்கமாட்டார்களா என்று ஆதனுங்கன் ஏங்குவானாம்.
வரிசை 38:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளில்_ஆத்திரையனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது