திப்புத்தோளார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
சி →‎பாடல் தரும் செய்தி: பராமரிப்பு using AWB
 
வரிசை 7:
சேஎய் என்பவன் முருகன். அவன் யானைமேல் செல்கிறான். அவன் தன் காலிலே வீரத்தின் சின்னமாகக் கழல் அணிந்திருக்கிறான். அந்தக் காலால் அவுணர்களைத் தேய்த்துக் கொன்றான். அவன் ஏறிச் சென்ற யானையும் அவுணர்களைக் குத்திக் கொன்றது. அதனால் அதன் தந்தக் கொம்புகளும் சிவந்து காணப்பட்டன. அவுணர்களின் குருதி பாய்ந்ததால் போர்க்களமே செங்களமாக மாறியது.
 
இந்த முருகன் குன்றத்தில் தலைவி வாழ்கிறாளாம். முருகனைப் போலவே ஆறு இதழ்களுடன் செந்நிறத்துடன் பூத்திருக்கும் காந்தள் பூ அவள் மலையில் மிகுதியாக உள்ளனவாம். எனவே தலைவன் தலைவி அணிந்துகொள்ளும் பரிசுப் பொருளாக வழங்கும் காந்தள் பூ தொடுத்த தழையாடை தலைவிக்கு வேண்டாமாம்.
 
இவ்வாறு சொல்லித் தோழி தலைவன் தலைவிக்குத் தரும் கையுறையை ஏற்க மறுக்கிறாள். திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையும்படி எடுத்துரைக்கிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/திப்புத்தோளார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது