பெண் (பால்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Female.svg|160px|thumb|உரோமைப் பெண் கடவுள் [[வீனசு (தொன்மவியல்)|வீனசின்]] சின்னம் பெண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.]]
 
'''பெண் ''' (''Female'', ♀) என [[உயிரினம்|உயிரினங்களில்]] அல்லது உயிரினப் பகுதிகளில் இடம் மாறா [[சூல் முட்டை]]களை (முட்டை கலங்கள்) உருவாக்கும் [[பாலினம்|பால்]] குறிக்கப்படுகிறது.
 
== வரையறைப் பண்புகள் ==
வரிசை 10:
* ஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),
* ஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),
* ஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது. <ref>Dusenbery, David B. (2009). ''Living at Micro Scale'', Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. {{ISBN|978-0-674-03116-6}}.</ref>
 
== பாலூட்டிகளில் பெண்ணினம் ==
''பாலூட்டி'' [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பின்]] சிறப்புப் பண்பாக [[பால்மடிச் சுரப்பி]]கள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு [[பால்]] சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் [[மனிதர்]]களில் [[மார்பகம்|மிகவும் வெளிப்படையானது]]. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை [[எச்ச உறுப்பு]]க்களாக விளங்குகின்றன.
 
பாலூட்டி பெண்ணினம் [[எக்சு நிறப்புரி]]யின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய [[ஒய் நிறப்புரி]]யையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது.
 
பாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், [[சுறா மீன்]], முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பெண்_(பால்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது