இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இசுலாம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
கி.பி.570-ல் பிறந்த [[முகம்மது நபி|நபிகள் நாயகம்]], தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார். தாம் பிறந்த [[மக்கா]] நகரை விட்டு [[மதீனா]] நகருக்கு அவர் சென்ற நாள் தான் [[ஹிஜ்ரி]] ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இசுலாமிய ஆண்டு, [[சந்திர நாட்காட்டி|சந்திரனின்]] [[வளர்பிறை]], [[தேய்பிறை]] கொண்டு நாட்களாகவும், மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.
[[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்]], கி.பி.632 முதல் 634 வரை [[அபூபக்கர் (ரலி)]], கி.பி.635 முதல் 644 வரை [[உமர் (ரலி)]], கி.பி.644 முதல் 656 வரை [[உதுமான் (ரலி)]], கி.பி.656 முதல் 661 வரை [[அலீ (ரலி)]] ஆகியோர் [[கலிபா|கலீபாக்களாக]] சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு [[கலிபா|கலீபாக்களை]] வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முசுலிம்களை [[சன்னி இசுலாம்|அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து]] என அழைக்கிறார்கள்.
 
[[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால்]], முதல் கலீபாவாக வரும் தகுதி [[அலீ (ரலி)]]க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் [[சியா முசுலிம்|சியாமுஸ்லிம்கள்]] என அழைக்கப்படுகிறார்கள். [[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. [[அவுரங்கசீப்]] (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
வரிசை 14:
[[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.
 
(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, [[வாழ்க்கைப் படி]] (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.
 
ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டு: [[ஷா பானு சீவனாம்ச வழக்கு]].
வரிசை 49:
== வரலாற்றுத் தீர்ப்புகள் ==
* [[ஷா பானு சீவனாம்ச வழக்கு]]
 
 
{{Law}}
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியச்_சட்ட_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது