குற்றவியல் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 9:
 
==குற்றவியல் சட்டத்தின் நோக்கங்கள்==
சட்டத்தின்படி நடக்காமைக்கு தீவிர பாதிப்புக்களையும் தண்டனைத் தடைகளையும் விதிப்பதில் குற்றவியல் சட்டம் தனித்து விளங்குகிறது.<ref>{{Cite web|url=http://www.ashgate.com/isbn/9781409427650 |author=Dennis J. Baker|title=The Right Not to be Criminalized: Demarcating Criminal Law's Authority|publisher=Ashgate|year=2011}}</ref> ஒவ்வொரு குற்றமும் குற்றக் கூறுகளை கொண்டுள்ளன. மிகவும் கடுமையான குற்றங்களுக்கு சில இடங்களில் [[மரணதண்டனை]]யும் வழங்கப்படுகிறது. உடல் வருத்தும் சவுக்கடி அல்லது கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளும் வழங்கப்படலாம்; இத்தகைய உடல் வருத்தும் தண்டனைகள் உலகின் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பல்வேறு நிபந்தனைகளுடன் சிறையில் அடைக்கப்படலாம். சிறையிருப்பு தனிமையில் இருக்கலாம். சிறைவாசம் ஒருநாளிலிருந்து வாழ்நாள் முழுமையுமாக இருக்கலாம். கட்டாய அரசுக் கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை தண்டனைகளும் வழங்கபடலாம். பிணைகளில் குறிப்பிட்ட செயல்முறைக்கேற்ப வாழ வேண்டியிருக்கலாம். குற்றம் இழைத்தவருக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது சொத்து அல்லது பணம் கைப்பற்றப்படலாம்.
 
குற்றவியல் சட்டத்தை செயலாக்க வழங்கப்படும் இந்த தண்டனைகளுக்கு ஐந்து நோக்கங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: பழிக்குப் பழி, குற்றத்தடுப்பு, செயல் முடக்கம், சீர்திருத்தம் மற்றும் மீளமைப்பு. ஒவ்வொரு நாட்டிலும் இவற்றில் ஒவ்வொன்றிற்கும் கொடுக்கப்படும் மதிப்பு மாறுபடலாம்.
 
*'''பழிதீர்ப்பு''' – குற்றவாளிகள் ஏதேனும் வகையில் ''துன்பப்பட'' வேண்டும். இதுவே மிகப் பரவலாக எதிர்பார்க்கப்படும் இலக்கு ஆகும். குற்றமிழைத்தவர்கள் முறையற்ற ஆதாயத்தை எடுத்துள்ளனர் அல்லது நீதியற்ற தீங்கை விளைவித்துள்ளனர்; எனவே குற்றவியல் சட்டம் "நீதியை நிலைநிறுத்த" குற்றமிழைத்தவர் ஏதேனும் துன்புறும் கேடு பெற வேண்டும். தாங்கள் கொல்லப்படாதிருக்கவே மக்கள் சட்டத்திற்கு அடிபணகின்றனர்; எனவே சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தினால் தங்களுக்கு அளிக்கபட்ட உரிமையை இழக்கின்றனர். இதன்படி கொலைக்குற்றம் இழைத்தவருக்கு மரணதண்டனை வழங்கப்படலாம். இதைச் சார்ந்த ஒரு கருதுகோளாக "சமனை சீராக்குவது" உள்ளது.
 
*'''குற்றத்தடுப்பு''' – குற்றமிழைத்தவர் மீது ''தனிநபருக்கான'' தடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் நோக்கம் குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க விருப்பமில்லாதபடி போதுமான தண்டனை வழங்குவதாகும். ''பொது'' குற்றத்தடுப்பு சமூகத்தை நோக்கி மேற்கொள்ளப்படுவதாகும். குற்றமிழைத்தவர்களுக்கு போதிய தண்டனை வழங்குவதன் மூலம் சமூகத்தில் மற்றவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்யாதிருக்க தூண்டப்படுகிறார்கள்.
 
*'''செயல் முடக்கம்''' – குற்றமிழைப்போரை சமூகத்திடமிருந்து ''அகற்றி'' அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுதல். இதனைப் பெரும்பாலும் [[சிறையிருப்பு|சிறைத் தண்டனை]] மூலம் நிறைவேற்றுகின்றனர். [[மரண தண்டனை]]யும் நாடு கடத்தலும் இதே நோக்கத்துடன் வழங்கப்பட்டன.
*'''சீர்திருத்தம்''' – குற்றவாளியை பண்படுத்தி ஒரு பயனுள்ள குடிமகனாக மாற்றிடும் நோக்கமுடையது. குற்றமிழைத்தவருக்கு போதிப்பதன் மூலம் அவரை நன்னெறிக்குத் திருப்பி மேலும் குற்றம் இழைக்காமல் இருக்கச் செய்தல்.
 
*'''சீர்திருத்தம்''' – குற்றவாளியை பண்படுத்தி ஒரு பயனுள்ள குடிமகனாக மாற்றிடும் நோக்கமுடையது. குற்றமிழைத்தவருக்கு போதிப்பதன் மூலம் அவரை நன்னெறிக்குத் திருப்பி மேலும் குற்றம் இழைக்காமல் இருக்கச் செய்தல்.
 
*'''மீளமைப்பு''' – இது பாதிக்கப்பட்டவரின் தரப்பிலான நடவடிக்கை. இதன் நோக்கம், அரசு மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவரின் பாதிப்பைச் சரி செய்தல். காட்டாக, பணம் கையாடியவரிடமிருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரின் இழப்பை ஈடுகட்டுதல். மீளமைப்புடன் குற்றவியலின் மற்ற முக்கிய நோக்கங்களும் [[குடிமையியல் சட்டம்|குடிமையியல் சட்ட]] கூறுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/குற்றவியல்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது