"ஆட்சித் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
{{தமிழ்}}
அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு [[தமிழ்]] பயன்படும் பொழுது அதை '''ஆட்சித் தமிழ்''' எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக [[இலக்கியத் தமிழ்]] உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. [[அறிவியல் தமிழ்]] தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.
 
[[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய பகுதிகளிலும் [[இலங்கை]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.
 
== தமிழ்நாடு ==
"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த [[தாய்மொழி|தாய்மொழியே]] தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று [[தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம்|ஆட்சிமொழிச் சட்டம்]] 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.<ref name = 'ஆட்சி மொழிச்சட்டம்'>{{cite web | url=http://www.lawsofindia.org/pdf/tamil_nadu/1956/1956TN39.pdf | title=The Tamil Nadu Official Language Act, 1956 - Act 39 of 1956 | publisher=தமிழக அரசிதழ் | accessdate=ஏப்ரல் 18, 2013}}</ref> ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.<ref>{{cite web | url=http://tamilvalarchithurai.org/a/about-us | title=தமிழ் வளர்ச்சித்துறை இயக்ககம் | publisher=தமிழ்நாடு அரசு வலைத்தளம் | accessdate=ஏப்ரல் 18, 2013}}</ref> அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் [[தமிழ் வளர்ச்சித் துறை]] மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன."<ref>[http://www.tn.gov.in/tamiltngov/policynotes/pdf/tamil_t.pdf தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை] </ref>
 
===நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழி===
தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956 என்பதுதான் தமிழ் மொழி குறித்த முதல் சட்டமாகும்.<ref name = 'ஆட்சி மொழிச்சட்டம்'>< /ref> இதில் நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.1976ல் தமிழ்நாட்டு சார்நிலை மற்றும் கீழமை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீழமை சார்பு நீதிமன்றங்களில் ஒரு மாநில அரசு அதன் விருப்பப்படி மொழியை ஆட்சிமொழியாக்கி கொள்ளலாம் என்பதற்கு சட்டம் இடம் தந்திருந்தது. 1908 உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 137 இதற்கு வகை செய்தது. இதைப்போல 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 272 அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்க சட்டம் வகை தந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 345ன் படியும் கீழமை சார்பு நீதி மன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு முதல் அடி எடுத்து வைத்தது. 1976ம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழிசட்டத்தில் 4அ, 4ஆ ஆகிய இரு பிரிவுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.பிரிவு 4அ, 4ஆ படி சார்நிலை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் எல்லா நடவடிக்கைகளின் சான்றுகளை பதிவு செய்ய தமிழ்மொழி அனுமதிக்கப்பட்டது. பிரிவு 4ஆ படி நீதிமன்றங்களில் தீர்ப்புகளை எழுத தமிழ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக 1976ல் தான் தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக நுழைந்தது. இதன் அடுத்த படியில் 17.11.1976ல் சட்டத்துறை அரசாணை எண் 191 பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சார்நிலை குற்றவியல் நீதிமன்றங்களில் மட்டும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழுக்கு அனுமதி கிடைத்தது. <ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'>{{cite news | title = நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லையா? | newspaper = தீக்கதிர் | date = 24 அக்டோபர் 2013
| page = 4 }}</ref>
 
====இராமாயி எதிர் முனியாண்டி வழக்கு====
இராமநாதபுரம் மாவட்ட முன்சீப் இந்த வழக்கில் தீர்ப்பை தமிழில் வழங்கினார். இவ்வழக்கில் தோற்ற பிரதிவாதிகள் தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அத்தீர்ப்பு செல்லாது எனக்கூறி இராமநாதபுரம் மாவட்ட சார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அவர் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஒதுக்கி விட்டு அத்தீர்ப்பினை ஆங்கிலத்தில் வழங்கவேண்டும் என்று பணித்தார். இத்தீர்ப்பினை எதிர்த்து வாதிகள் [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்ற]]த்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வழக் கில் மாவட்ட முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும் சட்டத்தின் அடிப்படையில் பார்க் கும் போது இராமநாதபுர மாவட்ட முன்சீப் 1969களின் அரசியல் சூழலால் உந்தப்பட்டு இத்தீர்ப்பினை வழங்கி உள்ளார் என்றும் இந்தத் தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்றும் இத் தீர்ப்பு காகித குப்பைக்கு சமமானது என்றும் கூறி மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.<ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'>< /ref>
 
====1982 அரசாணை====
சார்நிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 18-1-1982ல்தான் அரசாணை வெளிவந்தது. இதன்படி சார்நிலை உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகுதான் கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது.
ஆனாலும் கூட தமிழ் தெரிந்த சில நீதிபதிகளே ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களிலும் 1892ல் தமிழ் ஆட்சி மொழியானது. எனினும் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுத விலக்களிப்பு ஆணைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கே.ஏ.சாமி காலத்தில் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அலுவலக மொழிச்சட்டத்திற்கு முரணான இந்த சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.<ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'>< /ref>
 
====உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி====
 
இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 348(2) தமிழ்மொழிக்கும் பொருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் இருக்க முடியும். வழக்குரைஞர்களின் தமிழ் மன்றம் 2001ல் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் பி.சுபாஷன் ரெட்டி, கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. . உயர்நீதிமன்ற மொழி குறித்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட் டும்தான் உண்டு.
அவர்தான் ஆணை பிறப் பிக்கவேண்டுமே தவிர நீதிமன்றத்தில் வாதாடி பயன் இல்லை என்று நீதி பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது. 6-12-2006ல் தமிழக சட்டமன்றம் ஒருதீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் தமிழில்அனைத்து நிர்வாகநடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கொள்கை அடிப் படையில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு-348(2) உடன் இணைந்து 1963 ஆட்சி மொழிச்சட்டப்பிரிவு (7)ன்படி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புஅனைத்தையும் தமிழில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது. இதற்கு குடியரசுத்தலைவரின் அனுமதி தேவை. ஒன்றிய அரசு மூலம் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். இந்தத் தீர்மானம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பப்பட்டது. அவரும் இதுகுறித்து உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மத்தியஅரசின் சட்டம் மற்றும்நிதி அமைச்சகம் தமிழக அரசுக்கு27-2-2007ல் ஒரு கடிதம் அனுப்பியது.<ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'>< /ref>
 
உச்சநீதிமன்றத்தில் இது குறித்து கலந்துபரிசீலிக்கப்பட்டது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை மற்றும் இதர நடவடிக்கைகளில் மாநில மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று தலைமை நீதிபதி கருதுவதாக கூறப்பட்டது. 2010 ஜூனில் நடைபெற்ற கோவைச்செம்மொழி மாநாட்டில் நீதிமன்ற மொழி குறித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு தமிழில் வாதாட ஒரு வழக் குரைஞர் அனுமதி கோரினார்.நீதிபதிஅனுமதி மறுத்துவிட்டார்.<ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்' /><ref>{{cite news | title = Lawyer seeks to argue in Tamil, judge says no way | newspaper = Times of India | date = January 3, 2013 | url = http://articles.timesofindia.indiatimes.com/2013-01-03/chennai/36129925_1_tamil-high-court-advocates-and-litigants | accessdate = 24 அக்டோபர் 2013 }}</ref> <ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'></ref>
 
===ஆட்சி மொழிப் பயிலரங்கம்===
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2718729" இருந்து மீள்விக்கப்பட்டது