இராமநாதன் கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''இராமநாதன் கிருஷ்ணன்''' (பிறப்பு 11 ஏப்ரல் 1937, [[சென்னை]], [[இந்தியா]]) இந்தியாவின் ஓய்வுபெற்ற [[டென்னிஸ்]] விளையாட்டு வீரராவார். 1950களிலும் 1960களிலும் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுடன் விளையாடியவர்.
 
==விளையாட்டுத் தொழில்==
இவர் தமது தந்தை டி.கே. இராமநாதனிடம் டென்னிஸ் பயின்றார். விரைவிலேயே பல இளநிலை டென்னிஸ் பட்டங்களை வென்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.
===விம்பிள்டன்===
1954ஆம் ஆண்டு விம்பிள்டனில் சிறுவர் ஒற்றையர் பட்டத்தைப் பெற்ற முதல் ஆசியர் என்றப் பெருமையைப் பெற்றார். <ref name="Harmony magazine Feb 2005">[http://www.harmonyindia.org/hportal/VirtualPageView.jsp?page_id=6159 Harmony magazine Feb 2005]</ref> 1959ஆம் ஆண்டு, ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்றாம் சுற்று வரை முன்னேறினார். அதே ஆண்டு இந்தியாவில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில் விம்பிள்டனில் இரண்டாவதாக வந்த [[ராட் லேவர்|ராட் லேவரை]] நான்கு செட்களில் வீழ்த்தினார். <ref>[http://sportsillustrated.cnn.com/vault/article/magazine/MAG1070940/index.htm Sports Illustrated Aug 24,1959]</ref>. 1960ஆம் ஆண்டு விம்பிள்டன் தரவரிசையில் ஏழாவது இடம்பிடித்த கிருஷ்ணன் அரையிறுதியில் அந்த ஆண்டு கோப்பையை வென்ற நீல் பிரேசரிடம் தோற்றார். <ref>[http://archives.chennaionline.com/chennaicitizen/1999/rkrish.asp Chennaionline]</ref>. 1961 ஆம் ஆண்டு, மீண்டும் அரையிறுதியில் ஆடிய கிருஷ்ணன் ராட் லேவரிடம் தோற்றார். 1962ஆம் ஆண்டு விம்பிள்டன் தரவரிசையில் நான்காம் இடத்தைப் பிடித்தநிலையில் போட்டி இடையிலேயே கால் காயம் காரணமாக விலக வேண்டி வந்தது. <ref>Majumdar and Mangan Editors (2005) Sport in South Asian Society: past and present {{ISBN|0-415-35953-8}} [http://books.google.com/books?id=CBk2bV_EEK8C&pg=PA123&lpg=PA123&dq='Ankle+injury+to+Ramanathan+Krishnan+at+Wimbledon'&source=bl&ots=z-efDjanxG&sig=ojvk40WnLUG6K72vPzUR-gFMtTE&hl=en&ei=GyfKSuKJDMerlAegv6WSAw&sa=X&oi=book_result&ct=result&resnum=6#v=onepage&q='Ankle%20injury%20to%20Ramanathan%20Krishnan%20at%20Wimbledon'&f=false]</ref>.
 
===டேவிஸ் கோப்பை===
கிருஷ்ணன் 1966ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை இறுதியாட்டம் செல்ல பங்கெடுத்த அணியில் முதன்மை ஆட்டக்காரராக இருந்தார்.மண்டலங்களிடையேயான போட்டியில் இந்தியா மேற்கு செருமனியை வென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரையிறுதியில் கொல்கத்தாவில் பிரேசிலுடனான ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரு ஆட்டங்கள் வென்ற நிலையில் போட்டி முடிவு கிருஷ்ணனுக்கும் தாமஸ் கோக்கிற்குமிடையே நடந்த ஆட்டத்தை சார்ந்திருந்தது.கோக் இரண்டுக்கு ஒன்று என்று செட்டளவிலும் நான்காவது செட்டில் 5-2 என்ற ஆட்ட அளவிலும் முன்னணியில் இருந்தார். மறக்க முடியாத விளையாட்டை விளையாடி கிருஷ்ணன் நான்காவது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்று போட்டியையும் வென்றார்.<ref>[http://tssonnet.com/tss2936/stories/20060909006003100.htm The never-say-die Krish: Sportsstar weekly Sep 9,2006]</ref>. 1953 க்கும் 1975க்கும் இடையே கிருஷ்ணன் டேவிஸ் கோப்பை விளையாட்டுகளில் தொடர்ந்து விளையாடி 69-28 என்ற வெற்றிக் கணக்கை நிலைநாட்டினார். <ref>[http://www.daviscup.com/en/players/player/profile.aspx?playerid=10002759 Davis Cup Record]</ref>.
 
இந்திய தேசிய டென்னிஸ் போட்டிகளில் எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்றுள்ளார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதன்_கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது