சுனில் வர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
| homepage =
}}
'''சுனில் வர்மா''' ({{lang-te|సునీల్ వర్మ}}), ஒரு தெலுங்கு நகைச்சுவை நடிகர். இவர் ''அந்தால ராமுடு (2006)'', திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார், பிறகு 2010-ம் ஆண்டு [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]] எஸ். எஸ். ராஜமெளலியின் ''மரியாத ராமன்னா (2010)'' திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் தன்னுரைய நகைச்சுவை நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் இயக்குநர் வீரபத்திரன் திரைப்படமான ''பூல ரங்கடு (2012)'' படத்திற்காக [[w:en:Rectus abdominis muscle | சிக்ஸ் பேக்]] ஏற்றியிருக்கிறார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
1974-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் திகதி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] உள்ள பீமாவரத்தில் பிறந்தார், இவருடைய ஐந்தாவது அகவையில் தன்னுடைய தந்தையை பறிகொடுத்தார், தன்னுடைய தாயின் பராமரிப்பில் வளர்ந்தார்.
 
இவர் நடிகர், [[சிரஞ்சீவி (நடிகர்) | சிரஞ்சீவியின்]] தீவிர ரசிகர், தன்னுடைய பள்ளி பருவத்தில் சிறந்த நடனக்கலைஞராக வர வேண்டுமென்று எண்ணினார். இவர், வட்டார நடன் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றார். இவருடைய ஆசிரியரின் அறிவுரையின்படி, கலைத்துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். அதன்பிறகு, மேடை நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார். இவருடைய தோற்றத்தின் காரணமாக, இவருக்கும் வரும் வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.
 
1995-ம் ஆண்டு, இவர் திரைத்துறையில் [[நடனம்| நடனக்கலைஞராக]] நுழைந்தார். [[ஐதராபாத்|ஐதராபாத்தில்]] உள்ள ஒரு நடனப்பள்ளியிலும் இணைந்தார். இவருக்கு வில்லனாக நடிக்க அவா இருந்தபோதும், நகைச்சுவை நடிகராக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குநர் திரிவிக்ரமின் நெருங்கிய நண்பராவார்.
 
== திரை வாழ்க்கை ==
வரிசை 24:
''ப்ரேம கதா'' மற்றும் ''சுயம்வரம்'' ஆகியவையே இவருடைய திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டது. ''சிறு நவ்வுட்டோ'' மற்றும் ''நுவ்வே காவாலி''ஆகிய படங்களில் முதலில் நடித்தார். இவற்றுல், ''நுவ்வே காவாலி'' திரைப்படம் முதலில் வெளியானது.<ref>[http://www.idlebrain.com/celeb/interview/sunil.html Sunil - Telugu Cinema interview<!-- Bot generated title -->] {{ஆ}}</ref>
 
2006-ம் ஆண்டு, ஆர்த்தி அகர்வாலுடம் இணைந்து, ''அந்தால ராமுடு'' திரைப்படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்தார் பிறகு எஸ். எஸ். ராஜமெளலி இயக்கத்தில், சலோனியுடன் இணைந்து ''மரியாத ராமன்னா'' திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்தார். மரியாத ராமன்னா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுனில் தெலுங்கு திரைத்துறையில் ஒரு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கினார். இவர் ராம் கோபால் வர்மாவுடன், கதா ஸ்கிரீன்ப்ளே தர்ஷக்தவம் அப்பலராஜு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பிப்ரவரி 18, 2012-ம் ஆண்டு வெளியானது.
 
சுனில் நடிப்பில் வெளியான ''பூல ரங்கடு'' திரைப்படம் உலகம் முழுவதிலும் 450 - திரையரங்கில் வெளியானது, நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது, ''ராமு வெட்ஸ் சீதா'' திரைப்பத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பூல ரங்கடு திரைப்படத்திற்குப் பிறகு, பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், சுனிலுடம் படம் செய்ய முன்வந்துள்ளனர். சுனில் நகைச்சுவையாளராக இருந்த போது, சுமார் 15 லட்சங்கள் சம்பளமாக பெற்றவர், தற்போது, 3 கோடி வரையிலும் உயர்த்தியுள்ளார்.
வரிசை 392:
}}
{{DEFAULTSORT:சுனில்}}
 
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுனில்_வர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது