பொகவந்தலாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
ஆக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
14:06, 6 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
பொகவந்தலாவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அட்டன், பலாங்கொடை நகரங்களுடன் சிறு பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள பகவந்தலாவை பல்லத்தாக்கு தேயிலைக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வசதிகள்
அடைவு
பகவந்தலாவை நகரம் இலங்கை இரயில் வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பகவந்தலாவை நகரை அட்டனிலிருந்து நோர்வுட் வழியாகவும், பலாங்கொடையிலிருந்து பின்னவளை வழியாகவும் பேருந்து அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.
மருத்துவ வசதி
இங்கு இலங்கை அரசின் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ளது. தோட்டங்களுக்கான தனிப்பட்ட வைத்திய சாலைகளும் காணப்படுகின்றன.
கல்வி
இங்கு ஒரு சிங்கள மொழி பாடசாலையும் 3 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளன. உயர்தரம் வரையான பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன.
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |