தண்டுவட நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
}}
'''தண்டுவட நரம்பு''' என்பது ஒரு கலப்பு [[நரம்பு]] ஆகும். இது உடலுக்கும் [[முள்ளந்தண்டு வடம்|தண்டுவடத்திற்கும்]] இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக [[முள்ளந்தண்டு நிரல்]] ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான [[கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்]], [[நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்]], [[நாரி முள்ளந்தெண்டெலும்புகள்]], [[திருவெலும்பு]] மற்றும் [[வாலெலும்பு]] என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|title=Spinal Nerves|url=https://www.nlm.nih.gov/cgi/mesh/2007/MB_cgi?mode=&term=Spinal+nerves|publisher=National Library of Medicine|accessdate=12 April 2014}}</ref> இவைகள் முறையே 8 இணை '''[[கழுத்து தண்டுவட நரம்புகள்]]''', 12 இணை '''[[நெஞ்சு தண்டுவட நரம்புகள்]]''', 5 இணை '''[[நாரி தண்டுவட நரம்புகள்]]''', 5 இணை '''[[திருவெலும்பு தண்டுவட நரம்புகள்]]''' மற்றும் 1 இணை '''[[வாலெலும்பு தண்டுவட நரம்பு]]''' ஆகும். தண்டுவட நரம்புகள் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தின்]] பகுதிகள் ஆகும்.
==அமைப்பு==
[[File:Gray675.png|thumb|left|240px|தண்டுவட நரம்பு]]
[[File:Cervical vertebra english.png|thumb|240px|தண்டுவட நரம்பின் அமைவிடம்]]
அணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு வயிற்றுப்புற வேர் மற்றும் முதுகுப்புற வேர் இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற வேர் உட்காவும் நரம்பிழைகளையும் வயிற்றுப்புற வேர் வெளிக்காவும் நரம்பிழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்பு '''சி1''' பிடரெலும்புக்கும் மற்றும் அட்லஸ்க்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தண்டுவட_நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது