புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 166:
 
இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.
 
 
== புதுக்கோட்டை தொண்டைமான்கள் ==
வரி 178 ⟶ 177:
மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.
 
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் [[சந்தா சாகிப்]]பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் [[ஐதர் அலி]]யுடன் போர்புரிந்தபொழுதும் [[புதுக்கோட்டை சமஸ்தானம்| புதுக்கோட்டை மன்னர்]] ஆங்கிலேயக் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]க்கு உதவியாக இருந்தார்.
 
[[பாஞ்சாலங்குறிச்சி]]யின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த [[கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்ட பொம்மனைப்]] பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.
 
பின்னர் மன்னரான ''விஜயரகுநாதராயத் தொண்டைமான்'' (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு ''பிளாக்பர்ன்'' என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை ''சேஷய்ய சாஸ்திரி'' என்ற [[திவான் (அமைச்சர்)| திவான்]] கவனித்தார்.
 
இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து ''மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்'' புதுக்கோட்டையின் மன்னரானார் (1886).
1912ஆம் வருடம் [[புதுக்கோட்டை]] நகரத்தில் [[நகராட்சி]] மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் [[சென்னை மாகாணம்| சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர். <ref>[http://www.census2011.co.in/census/district/43-pudukkottai.html Pudukkottai District : Census 2011 data]</ref>
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர்.
வரி 195 ⟶ 194:
 
=== வருவாய் நிர்வாகம் ===
இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 12 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 45 உள்வட்டங்களும், 763 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
=== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ===
இம்மாவட்டம் 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=22 புதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>
, 499 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டது.<ref>[https://pudukkottai.nic.in/development/ புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்]</ref> மேலும் [[புதுக்கோட்டை]] மற்றும் [[அறந்தாங்கி]] என இரண்டு [[நகராட்சி]]களையும் மற்றும் 8 [[பேரூராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://pudukkottai.nic.in/local-bodies/ புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகளும்; பேரூராட்சிகளும்]</ref>
== கல்வி ==
வரி 242 ⟶ 241:
 
== அரசியல் ==
இம்மாவட்டம் 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. <ref>[https://pudukkottai.nic.in/elected-representatives/ புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்]</ref>
 
== சுற்றுலாத் தலங்கள் ==
வரி 270 ⟶ 269:
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
 
 
{{தமிழ்நாடு}}
 
[[பகுப்பு:தமிழ்நாடுபுதுக்கோட்டை மாவட்டம்| மாவட்டங்கள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது