ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 44:
இதனிடையே [[காசி]]யில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் [[பூணூல்]] அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய [[மீசை]] வைத்திருப்பதில்லை என்று [[கோயில்]] காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.<ref name="Periyar" />
 
பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிராமணரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிராமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றதாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார்.<ref name="Periyar" /> அதன் விளைவாக அதுவரை [[இறைப்பற்று]]ள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இந்து சமய எதிர்ப்பாளராக[[இறைமறுப்பு|இறைமறுப்பாளராக]] மாற்றிக்கொண்டார்.<ref name="Gopalakrishnan1">கோபாலகிருஷ்ணன், ''பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை'', பக்கங்கள். 14-17.</ref>
 
== அரசியல் வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது