ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 48:
== அரசியல் வாழ்வு ==
=== காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919–1925) ===
டஇராமசாமிஇராமசாமி [[1919]] ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான [[ஈரோடு]] நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். [[மகாத்மா காந்தி|காந்தியின்]] கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். [[தீண்டாமை]]யை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். [[1921]] இல் [[ஈரோடு]] கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய [[ஆங்கிலேயர்|ஆங்கில அரசு]] நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை]] மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.<ref name=BarathidasanUniversity>{{cite web |url= http://www.evrperiyar-bdu.org/biography.htm |title= பெரியார் ஈ.வெ.ராமாசாமியின் வாழ்க்கை வரலாறு (1879–1973) |accessmonthday= செப்டம்பர் 6 |accessyear= 2008 |year= 2006 |publisher= பாரதிதாசன் பல்கலைக்கழகம்}}</ref>
 
[[1922]] இல் இராமசாமி [[சென்னை]] இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் [[1925]] இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியிலிருந்து விலகினார்.<ref name="Kandasamy">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவரின் தீண்டாமை ஒழிப்பு பார்வை|author= கந்தசாமி, டபுள்யு.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரன்டேச்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = எக்சிஸ்: போனிக்ஸ் |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>
வரிசை 119:
 
1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான [[கா. ந. அண்ணாதுரை|காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை]] இராமசாமியிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார்.<ref name="Pandian" /> இந்த பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை [[தில்லி]] அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.<ref name="Diehl-3.1555">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 29.</ref> அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, [[இறைமறுப்பு|கடவுள் மறுப்பு]] போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், [[ஜூலை 9]], 1948 அன்று இராமசாமி, தன்னை விட '' 40'' வயது இளையவரான [[மணியம்மையார்|''மணியம்மையாரை'']] மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரைத்]] தலைமையில் விலகினர்.<ref name="periyar_tamilnation">{{cite web|url=http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm|title=20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி|accessdate=2009-01-17 |publisher= தமிழ்நேசன்.ஒஆர்ஜி |date= }}</ref>
 
<br />
 
[[படிமம்:Maniammai and periyar.jpg|இடது|thumb|200px|இராமசாமியும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்]]
 
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் இராமசாமி அவர்களின் [[திமுக]] கட்சியை ''கண்ணீர்த்துளி கட்சி'' என அதுமுதல் வர்ணிக்கலானார்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20308151&format=print&edition_id=20030815 பெரியார் இவர்களை கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை] பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009</ref>
 
 
 
 
 
 
<br />
 
==== 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு ====
இராமசாமி 1957 தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸை]] முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. [[திராவிட முன்னேற்றக் கழகம்]] 15 இடங்களைப் பிடித்தது.<ref>நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 257</ref>
 
 
=== இறுதிக் காலம் ===
வரி 142 ⟶ 132:
[[1958]] இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]], [[இந்தி]]க்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். [[1962]] இல் இராமசாமி தனது கட்சியான [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] புதிய பொதுச்செயலாளராக [[கி. வீரமணி|கி.வீரமணியை]] முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று யுனஸ்கோ மன்றம் என்ற அமைப்பு "''புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி''" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.<ref>{{cite news |title=Periyar's 45th death anniversary: Here are some rare photos of the Dravida Kazhagam founder |url=http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html |accessdate=7 May 2019 |agency=நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref><ref name="Tamilnation">{{cite web | url=http://www.tamilnation.co/hundredtamils/periyar.htm | title=One Hundred Tamils of the 20th Century Periyar E.V.Ramaswamy - பெரியார் | accessdate=3 மே 2019}}</ref><ref name="cc">{{cite web | url=https://www.countercurrents.org/dalit-periyar280603.htm | title=Periyar's Movement | publisher=Countercurrents.org | date=28-06-2003 | accessdate=3 மே 2019}}</ref><ref name="Kandasamy-7">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை|author= கந்தசாமி,|coauthors= |year= |publisher = |page = 104 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA104,M1}}</ref>
 
=== விமர்சனங்கள் ===
 
*
* சுதந்திரப்போராட்ட வீரரும் கவிஞருமான பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
* பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்" என்றும் இராமசாமி சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.<sup>[[ஈ. வெ. இராமசாமி#cite%20note-43|[43]]]</sup>
* ”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.” ”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.” ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” நூல்:- தமிழும் தமிழரும் இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965) [http://www.tamilhindu.com/2009/06/periyar_marubakkam_part02/]
 
== இதழ்கள் ==
வரி 168 ⟶ 152:
இராமசாமியின் கடைசிக் கூட்டம் [[சென்னை]], [[தி.நகர்|தியாகராய நகரில்]], [[திசம்பர் 19]], 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, [[வேலூர்]] சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி [[திசம்பர் 24]], 1973 அன்று தனது ''94'' ஆம் வயதில் இயற்கை எய்தினார்.<ref name="periyar_tamilnation" />
 
=== விமர்சனங்கள் ===
* இராமசாமி இந்து மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சிக்கவில்லை.{{cn}}
* சுதந்திரப்போராட்ட வீரரும் கவிஞருமான பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
* பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்" என்றும் இராமசாமி சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.<ref>http://siragu.com/?p=9481</ref>
*”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.” ”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.” ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” நூல்:- தமிழும் தமிழரும் இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965) [http://www.tamilhindu.com/2009/06/periyar_marubakkam_part02/]
 
<br />
== வாழ்க்கை வரலாறு ==
 
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது