அரிகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பக்கம் நின்றசீர் நெடுமாற நாயனார் என்பதை அரிகேசரி என்பதற்கு நகர்த்தினார்: கட்டுரைகளை இணைக்க
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{merge to|அரிகேசரி|discuss=|date=August 2017}}
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = நின்றசீர் நெடுமாற நாயனார்
வரி 34 ⟶ 32:
 
== சமய நூல்களில் மாறனார் ==
நின்றசீர் நெடுமாற நாயனார் பாண்டிய மன்னரும்வேந்தரும் சைவ [[நாயன்மார்|நாயன்மார்களுள்]] ஒருவரும் ஆவர். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று [[திருத்தொண்டத் தொகை]] குறிப்பிடுகிறது. நெடுமாறனார் பாண்டிநாட்டுபாண்டிநாட்டை மன்னாராய்ப்ஆண்ட பாராண்டு வந்தார். அந்நாளில்போது வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான [[மங்கையற்கரசியார்|மங்கையற்கரசியாரைத்]] [[திருமணம்]] செய்தார்.
 
மாறனார் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். [[திருஞானசம்பந்தர்]] என்னும் நாமமந்திரத்தைச் செவிப்புலத்துற்றபோதே மாறனாரது தீப்பிணி சிறிது குறைவுற்றது. சம்பந்தப் பிள்ளையார் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்மாகியவாது என உரைத்தார். சம்பந்தப்பிளையார் திருப்பதிகம் பாடி [[திருநீறு]] தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றூம் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார். சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதத்தில் பச்சென்றிருந்த ஏட்டைப் பரசமய கோளரியார் காட்ட சமணர்கள் சாம்பரைக் கையினாற் பிசைந்துகொண்டு தூற்றிக்கொண்டு நின்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர் ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார். அவ்வங்கதம் விளங்காத அமணர் அதனைப் பயன் மொழியாகக் கொண்டு புனல் வாதத்திற்கு எழுந்தனர். புனல் வாதத்தின்போது வாழ்கஅந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் சம்பந்தப்பிள்ளையார் பாடினார். அத்திருப்பாசுரத்தில் அமைந்த வேந்தனும் ஓங்குக எனும் மந்திரமொழியால் கூன்நீங்கி '''நின்றசீர் நெடுமாறன்''' ஆனார். வாதில்தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு [[குலச்சிறையார்|குலச்சிறையாரைப்]] பணித்தார். அமணர் கழுவேறத் தாம் [[திருநீறு]] பூசிச் சைவரானார். சமந்தப் பிள்ளையாருடன் ஆலவாய்ப்பெருமான் முன் நின்று. “திருவாலவாய் மன்னரே! அமணரின் மாயையில் மயங்கிக் கிடந்த என்னை [[ஆளுடையபிள்ளையார்|ஆளுடையபிள்ளையாரைத்]] தந்து ஆட்கொண்டருளினீர் எனப் போற்றி செய்தார். சம்பந்தப் பிள்ளையாருடன் கூடிப் பாண்டிநாட்டுத் திருத்தலம் பலவும் பணியும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் சோழ நாடு செல்ல நினைத்ததும் அவருடன் போகவே மனம் விரும்பினார். பிள்ளையார் “நீர் இங்கிருந்து சிவநெறி போற்றுவீர்” எனக் கூறிய மொழிக்கிணங்கி [[மதுரை]]யில் இருந்து சிவநெறி தழைக்க அரசாண்டிருந்தார். இவ்வண்ணம் பகை தடிந்து, சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு சிவலோகமுற்றார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது