"தொடக்க நூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரைந்த சுவர் ஓவியம். வத்திக்கான் நகரம்.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''தொடக்கநூல்''' (''Genesis'') என்பது [[டனாக்|எபிரேய விவிலியம்]] மற்றும் [[யூதர்|பழைய ஏற்பாடு]] ஆகியவற்றில் முதல் நூலாக இடம்பெறுகிறது. இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.
'''ஆதியாகமம்'''
 
(''Genesis'') என்பது [[டனாக்|எபிரேய விவிலியம்]] மற்றும் [[யூதர்|பழைய ஏற்பாடு]] ஆகியவற்றில் முதல் நூலாக இடம்பெறுகிறது. இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.
 
== நூல் பெயர் ==
 
"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்" என்று இந்நூல் தொடங்குவதால் "தொடக்க நூல்" என்னும் பெயர் வரலாயிற்று. இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "B'reshiyth" அதாவது (கடவுள்) "படைத்தார்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் Γένεσις (Genesis = பிறப்பு, தொடக்கம், தோற்றம்) என்பதாகும்.
 
== '''தொடக்க நூல்'''- தோரா (Torah) என்னும் ஐந்நூலின் பகுதி ==
 
'''தொடக்க நூல்''' என்பது யூத மற்றும் கிறித்தவ விவிலியத்தின் முதல் நூலாக உள்ளது. அந்த முதல் நூலைத் தொடர்ந்து அமைந்துள்ள நான்கு நூல்களையும் சேர்த்து ஒரு தொகுதியாகக் கருதுவது யூத, மற்றும் கிறித்தவ வழக்கம். இந்த ஐந்து நூல்களும் பின்வருவன:
== தோராவின் ஆசிரியர் ==
 
யூத மரபுப்படி, தோரா நூல் தொகுப்பு [[மோசே]] என்னும் இறைவாக்கினரால் உருவாக்கப்பட்டது. எனவே, தோராவை ''மோசே(யின்) சட்டம்'' என்று கூறுவதும் உண்டு. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை இக்கருத்து நிலவியது. அதன் பின்னர், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் தோரா முழுவதும் மோசே என்பவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்னும் கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது. மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று, மக்களுக்கு அளித்தார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், தோரா என்று அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியின் இறுதி ஆசிரியர் மோசே என்பது இப்போது ஏற்கப்படுவதில்லை.
 
ஒருசில ஆய்வாளர் கருத்துப்படி, மோசே தோராவின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம். அவர் பெயரில் கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சில மரபுகளும் இருந்திருக்கலாம். ஆயினும் தோராவுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வேறு ஆசிரியர்களே. விவிலியத்தில் விளக்கப்படுகின்ற இசுரயேல் மக்களின் சமய நம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அடித்தளம் இட்டவர் மோசே என்பது உறுதி. ஆனால், கி.மு. 450 அளவில்தான் இந்நூல்கள் இறுதிவடிவம் பெற்றன.
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2731554" இருந்து மீள்விக்கப்பட்டது