"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

892 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|தலைவர் பெயர்= சுமதி
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2= அண்ணாதுரை
|உயரம்=
|பரப்பளவு=11.65
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை=64496
|மக்களடர்த்தி=
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Dharmapuri}}
 
'''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்.தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.
 
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. தர்மபுரிக்கு மேற்கே 48 கிமீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது.
 
இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.
 
==தர்மபுரி நகராட்சி வரலாறு==
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. [[ஒகேனக்கல் அருவி]] இங்கிருந்து 46 கிமீ தொலைவில் உள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]] [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது.
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,619 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.5%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.99%, இசுலாமியர்கள் 9.65%, கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharmapuri-population-dharmapuri-tamil-nadu-803948 தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
*[http://municipality.tn.gov.in/Dharmapuri/ தர்மபுரி நகராட்சி இணையதளம்]
 
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
{{தர்மபுரி மாவட்டம்}}
[[பகுப்பு:அதியர் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:சேரர் போர்கள்]]
[[பகுப்பு:தர்மபுரி மாவட்டம்]]
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733066" இருந்து மீள்விக்கப்பட்டது