குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குடியேற்றக் காலம்: *விரிவாக்கம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 137:
 
குவாத்தமாலா பெரும்பாலும் மலைப்பாங்கான நாடு. ஆங்காங்கே பாலைநிலமும் மணல் குன்றுகளும் அமைந்துள்ளன. தெற்குப்பகுதி கடற்கரையுடனும் வடக்கே பரவலான பேட்டன் தாழ்நிலமும் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கான இரண்டு மலைத்தொடர்கள் நாட்டை மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றன. அனைத்து முதன்மையான நகரங்களும் மைய பீடபூமி பகுதியிலும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. வடக்கிலுள்ள பேட்டன் தாழ்நிலங்களில் மக்கள் குடியேற்றம் குறைவாக உள்ளது. இந்த மூன்று பிரிவுகளுமே வானிலை, உயரம், நிலப்பரப்பு ஆகியவற்றில் வேறுபட்டதாக உள்ளன. பீடபூமி குளிர்ந்து உலர்ந்த வானிலையைக் கொண்டுள்ளது; தாழ்பகுதிகள் வெப்பம் மிகுந்தும் ஈரப்பசையுடனும் உள்ளன. {{convert|4,220|m|abbr=off}} உயரத்துடன் இந்நாட்டின் தாஜுமுல்கோ எரிமலை மைய அமெரிக்க நாடுகளிலேயே மீயுயர் சிகரமாக உள்ளது.
 
அமைதிப்பெருங்கடலில் வீழும் ஆறுகள் சிறியதாகவும் ஆழம் குறைந்தவையாகவும் உள்ளன; கரிபியக் கடல் மற்றும் [[மெக்சிகோ வளைகுடா]]வில் வீழும் ஆறுகள் நீண்டதாகவும் ஆழமுள்ளவையாகவும் உள்ளன. பொலோச்சிக், டுல்சு ஆறுகள் இசபெல் ஏரியில் கலக்கின்றன; மோடாகுவா ஆறு [[பெலீசு]]டனான எல்லையிலும், உசுமசிந்தா ஆறு மெக்சிக்கோவுடனான எல்லையிலும் அமைந்துள்ளன.
 
===இயற்கைப் பேரழிவுகள் ===
[[படிமம்:guatemala town volcanic crater.jpg|thumb|A town along the [[பான் அமெரிக்க நெடுஞ்சாலை]]யில் அமைந்துள்ள ஓர் ஊரில் காணப்படும் எரிமலைவாய்.]]
கரீபியக் கடலுக்கும் அமைதிப் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ளதால் குவாத்தமாலா பல சூறாவளிகளை எதிர்கொள்கிறது. 2005 அக்டோபரில் ஏற்பட்ட இசுடான் சூறாவளியில் 1500க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர். இச்சேதம் காற்றால் ஏற்பட்டதை விட சூறாவளியைத் தொடர்ந்த பெரும் [[வெள்ளம்|மழைவெள்ளத்தாலும்]] சேற்றுசருக்கல்களாலும் ஏற்பட்டது. மே 2010இல் ஏற்பட்ட [[அகதா புயல்|அகதா புயலில்]] 200க்கும் கூடுதலானோர் உயிரிழந்தனர்.
 
குவாத்தமாலாவின் பீடபூமி கரீபிய, வட அமெரிக்க [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு|தட்டுப் புவிப்பொறைகளின்]] இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. ''மொடாகுவா உரசுமுனை'' எனப்படும் இந்நிலப்பிழை நாட்டின் வரலாற்றில் பல நிலநடுக்கங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. கூடுதலாக அமைதிப் பெருங்கடலின் ''இடையமெரிக்க அகழி'' எனப்படும் முதன்மை பெருங்கடல் [[கீழமிழ்தல் (நிலவியல்)|கீழமிழ்தல்]] குவாத்தமாலாவின் கடலோரத்திற்கு அருகே அமைந்துள்ளது. குவாத்தமாலாவில் 37 எரிமலைகள் உள்ளன; இவற்றில், பசாயா, [சான்ட்டியாகுடோ, [[குவாத்தமாலா தீ எரிமலை|புயூகோ]], டகானா என்பன உயிர்ப்புடனுள்ளன.
 
இயற்கைப் பேரழிவுகள் இந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரம் 1541இல் எரிமலைக் குழம்பு போக்காலும் 1773 நிலநடுக்கத்தாலும் [[ஆன்டிகுவா குவாத்தமாலா#வரலாறு|மாற்றப்பட்டுள்ளது]].
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது