பாறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==வரலாற்று வளர்ச்சி==
பாறை வட்டம் தொடர்பான தொடக்கக் கருத்துருவை முன்வைத்தவர், நிலவியலின் தந்தை எனப் போற்றப்படும், 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஜேம்ஸ் ஹூட்டன்]] (James Hutton) என்பவராவார். திரும்பத்திரும்ப நிகழும், பரிணாமமற்ற, பாறை வட்டம் பற்றிய கருத்துரு, 1960 களில் [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] (plate tectonics) பற்றி அறியப்படும்வரை, முதன்மை பெற்றிருந்தது. ''தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக்'' கொள்கையின் வளர்ச்சியுடன், அது பற்றிய விளக்கமும் அதிகரித்தபோது, பாறை வட்டம் பற்றிய கருத்து, அது முடிவின்றித் தொடரும் ஒன்று என்ற நிலையிலிருந்து, படிப்படியாக மாற்றமுறும் ஒரு நிகழ்முறை (process) என்ற நிலைக்கு மாற்றமடைந்தது. 1960 மற்றும் 70 களில், [[ஜே. டூசோ வில்சன்]] (J. Tuzo Wilson) என்பவர், ''தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக்'' கொள்கையையும் உள்ளடக்கி, [[வில்சன் வட்டம்]] என அறியப்படும் புதிய ''பாறை வட்ட'' மாதிரியை (model) உருவாக்கினார்.
 
==பாறை வட்டம்==
வரிசை 8:
===தீப்பாறைகளாக மாறுதல்===
 
[[பாறை|பாறைகள்]] புவி மேற்பரப்புக்குக் கீழே ஆழத்திற்குத் தள்ளப்படும்போது அவை உருகிக் [[கற்குழம்பு]] ஆகின்றன. மேற்படி கற்குழம்பு உருகிய திரவ நிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் இல்லாது போகும்போது, அது குளிர்ந்து திண்மமாகித் தீப் பாறையாக உருவாகும். இவ்வாறு புவிக்கடியில் உருவாகும் தீப் பாறைகள், ஊடுருவிய பாறைகள் (intrusive rocks) அல்லது [[பாதாளப் பாறைகள்]] (plutonic rocks) என அழைக்கப்படுகின்றன. இந்த நிகழ்முறையின் போது கற்குழம்பு மிக மெதுவாகவே குளிர்ந்து திண்மமாவதால், இவ்வாறு உருவாகும் பாறைகள் கரடுமுரடான (பெருப்பருக்கை = coarse-grained) பரப்புத்தோற்றம் (texture) கொண்டு அமைகின்றன. கற்குழம்பு, [[எரிமலை]] வெடிப்புப் போன்ற நிகழ்வுகள் காரணமாக வெளியேறி [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] வரும்போது அது விரைவாகக் குளிர்ச்சியடைகிறது. இவ்வாறு உருவானவை [[தள்ளற் பாறைகள்]] (extrusive rocks) அல்லது [[எரிமலைப் பாறைகள்]] (volcanic rocks) எனப்படுகின்றன. இத்தகைய பாறைகள் கரடுமுரடற்ற (நுண்பருக்கை = fine-grained) அல்லது வளவளப்பான [[பரப்புத்தோற்றம்]] கொண்டவையாக உருவாகின்றன. சில சமயம் இக் கற்குழம்பு குளிர்தல் மிக வேகமாக நடைபெறுவதால் [[படிகம்|படிகங்களாக]] (crystals) உருவாக முடியாமல் [[இயற்கைக் கண்ணாடி|இயற்கைக் கண்ணாடியாக]] மாறுகிறது. மூன்று வகைப் பாறைகளில் எதுவும் உருகித் தீப்பாறையாக ஆகமுடியும்.
 
===உருமாறிய பாறையாக மாறுதல்===
வரிசை 29:
 
===நீரின் முக்கிய பங்கு===
 
[[பகுப்பு:நிலவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பாறை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது