அழ. பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
==இதழியல் துறையில்==
தனது 13வது வயதில் 1976இல் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் 'கலைமுத்துக்கள்' கையெழுத்துப் பிரதியினை வெளிக்கொணர்ந்தார். அவ்விதழ் அப்போதைய மறுமலர்ச்சி மன்ற நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. 1979 இல் முற்றிலும் தன் சுயமுயற்சியாக 'ரதன் முத்து' என்ற கையெழுத்துப் பிரதியினை தன் கைப்பட உருவாக்கி ஓரிரு இதழ்கள் வெளிக்கொணர்ந்தார். 1980களின் ஆரம்ப வருடங்களில் பேரம் விஜயநாதன் துணையுடன் 'சிறுசுகள்' கையெழுத்து, தட்டெழுத்து இதழாக வெளிக்கொணர்ந்தார். இவ்விதழ் பிரதிகள் பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம், [[மறுமலர்ச்சி மன்றம்]], சங்கானை பொது நூலகம், காங்கேசன் துறை சீமந்து தொழிற்சாலை நூலகம், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நூலகம் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏழு இதழ்கள் வரை வெளிவந்தன.
மறுமலர்ச்சி மன்ற வெளியீடான 'காலைக் கதிர்' றோணியோ இதழில் ஆசிரியராக 1989-90இல் பொறுப்பெடுத்து நான்கு இதழ்கள் வந்தன.<ref>https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_1</ref><ref></ref> கொழும்பு பிறைற் புக் சென்ர‍ர் வெளியிட்ட புது அறிவொளி சஞ்சிகையின் ஓரிதழில் (1990ல்) அதன் ஆசிரியராக இருந்தார்.https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_2
[[தேசிய கலை இலக்கியப் பேரவை]] வெளியிடுகின்ற [[தாயகம் (இதழ்)|தாயகம் இதழின்]] ஆசிரியர் குழுவில் 1996இலிருந்து பணியாற்றுவதோடு அதன் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றுவதோடு அதன் இதழ் வடிவமைப்பிலும் சிவ பரதன் ஆக பங்கெடுக்கின்றார்.
இலங்கை வங்கி யாழ்ப்பாணம் கலை இலக்கிய விளையாட்டுக் கழக வெளியீடாக வந்த ஊக்கி காலாண்டு இதழின் இணை ஆசிரியராக பணியாற்றினார். 2018இல் மூன்று இதழ்களே வெளிவந்துள்ள 'மக்கள் சக்தி' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
த‍மிழகத்திலிருந்து வெளிவரும் [[வளரி]] கவிதை இதழின் வடிவமைப்பில் 2018 இலிருந்து பங்கெடுப்பதோடு 2019 இலிருந்து அதன் பொறுப்பாசிரியராக இணைந்துள்ளார்.
 
==கவிஞராக==
சிறு வயதிலிருந்து எழுதுவதி்ல் ஆர்வம் காட்டிய இவர் 1980களில் தன்னை கவிஞராக முன்னிறுத்தினார். சோதிடமலர், [[பூபாளம் (சிற்றிதழ்)|பூபாளம்]], [[வீரகேசரி]], தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு, திசை, பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம், புது அறிவொளி, ஊக்கி போன்ற இதழ்களிலும் தமிழகத்தில் தம்ழ்ப்பணி, மகாகவி கவிதாமண்டலம் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்த‍துடன் கூடுதலாக பல கவிதைகள் 'தாயகம்' இதழிலேயே பிரசுரமாகியுள்ளன. புவிநேசன், விருத்தன், காலையூரான், சிவபரதன், ப.லதா, சத்தியவதனி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம், கொக்குவில், இருபாலை, கொழும்பு தமிழ் சங்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். இவரது கவிதைகளை தொகுத்து 1989இல் மறுமலர்ச்சி மன்றத்தில் கவிதா நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 1997இல் இவரது தேர்ந்த கவிதைகள் 'அப்படியே இரு' எனும் தொகுப்பாக தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த‍து. தொடர்ந்து இப்படியும், எப்படியெனிலும் கவிதைத் தொகுப்புகள் வந்தன. வெளியீட்டுவிழாக்கள், அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தமிழகத்தில் சென்னையில் எழில் கலை மன்றத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குனாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வளரி, வார்ப்பு, காற்றுவெளி, எழுத்து மின் இதழ்களிலும் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அழ._பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது