இரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 64:
== இரும்பு தயாரித்தல் ==
[[File:Chinese Fining and Blast Furnace.jpg|thumb|இரும்புத் தாதுவிலிருந்து இரும்பை உருக்கிப் பிரித்தல். ஊது உலையில் வார்ப்பு இரும்பு தயாரிக்கப்படுகிறது.]]
[[File:Iron-Making.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டில் இரும்பு தயாரிக்கப்பட்ட முறை]]
வரிசை 71:
ஒரு சில வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் போது தூய இரும்பு ஆய்வகங்களில் சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. முதலில் இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் ஐதரசனைச் சேர்த்து இரும்பு பென்டாகார்பனைல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கிச் சிதைத்து தூய இரும்புத்தூள் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு குளோரைடு சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் தூய இரும்பு தயாரிக்கலாம்<ref>H. Lux "Metallic Iron" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1490–1.</ref>.
=== ஊது உலையில் ===
Fe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஏமடைட்டு மற்றும் Fe3O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டமேக்னடைட்டு என்ற இரும்புத் தாதுக்களில் இருந்து தொழிற்சாலை இரும்பு உற்பத்தி தொடங்குகிறது. இத்தாதுக்களுடன் கார்பன் சேர்த்து சூடுபடுத்தப்படும் வினையான [[உயர்வெப்பக்கார்பன் வினை]]யினால் தாதுக்கள் இரும்பாக ஒடுக்கப்படுகின்றன. இம்மாற்றம் ஊது உலையில் சுமார் 2000° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. கல்கரி வடிவக் கார்பன் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் முறையில் [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] இளக்கியாகச் சேர்க்கப்படுகிறது. இளக்கியின் மூலமாக சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. கல்கரியும் சுண்ணாம்புக்கல்ல்லும் உலையின் மேற்புறமாக தாதுக்களுடன் சேர்க்கப்படுகின்றன. வெப்பக் காற்று ஊது உலையின் கீழ்ப்புறமாக வேகமாகச் செலுத்தப்படுகிறது.
வரிசை 87:
கால்சியம் ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடுடன் சேர்ந்து கசடாக மாற்றப்படுகிறது.
:CaO + SiO<sub>2</sub> → CaSiO<sub>3</sub>
செயல்முறையில் உருவான இரும்பும், கசடும் தனித்தனியாக வெளியேற்றப்படுகின்றன.
[[File:LightningVolt Iron Ore Pellets.jpg|thumb|எஃகு தயாரித்தலில் பயன்படும் தாதுக் குவியல்]]
வரிசை 93:
=== நேரடி இரும்பு ஒடுக்கம் ===
நேரடியாக இரும்பு தயாரித்தல் சூழலுக்கு தகுந்தவாறு பின்பற்றப்படுகிறது. நேரடி இரும்பு ஒடுக்கம் முறை மாற்று முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை வாயு பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் மோனாக்சைடு உருவாக்க்கப்படுகிறது.
வரிசை 100:
இவ்வாயு இரும்புத்தாதுவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுவதால் இரும்பு உருவாகிறது.
:Fe<sub>2</sub>O<sub>3</sub> + CO + 2 H<sub>2</sub> → 2 Fe + CO<sub>2</sub> + 2 H<sub>2</sub>O
சுண்ணாம்புக்கல் இளக்கி சேர்க்கப்பட்டு சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன.
இவற்றுள் பல உட்பிரிவுகள் உள்ளன.
வரிசை 107:
* இரும்பு மற்றும் எஃகு ஆகியவை உறுதியானவை என்பதால் இயந்திரங்கள், அவற்றின் கட்டுமானத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள், [[கடப்பாரை]], [[உளி]] போன்ற வெட்டுங் கருவிகள், கட்டுமானப் பொருட்கள், கொள்கலன்கள், இயந்திரப் பொறிகள், குழாய்கள், கலப்பு உலோகங்கள் என இவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருள்களால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாகும். அதனால் இரும்பின் தேவை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரிந்துக் கொண்டே வருகிறது. இன்றைக்கு உலோக உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இரும்பே.
* இரும்பு [[நிலைக்காந்தம்]], [[மின்காந்தம்|மின்காந்தங்கள்]] செய்வதற்கு முதன்மைப் பொருளாக விளங்குகிறது. இரும்பு, [[நிக்கல்]], [[கோபால்ட்]] இவை மூன்றும் பெரோகாந்தப்(Ferro) பொருட்களாகும். இரும்பிலுள்ள் எலெக்ட்ரானின் தற்சுழற்சியும் சுற்றியக்கமும் இணைந்து அதற்கு உயரளவு காந்தத்தன்மையை வழங்கியுள்ளன. மேக்னடைட் கனிமம் இயற்கையில் கிடைக்கும் காந்தமாகும் இது பெரோ சோ பெரிக் ஆக்சைடாகும். இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் மட்டும் கரைகிறது .
* [[இரத்தம்|இரத்தத்திலுள்ள]] சிவப்பணுவில் [[குருதிவளிக்காவி|ஹிமோகுளோபின்]] என்ற [[நிறமி]] உள்ளது .இதில் இரும்பு முக்கியப் பங்கேற்றுள்ளது .இது நுரையீரலிலிருந்து ஆக்சிஜனைப் பெற்று கடத்தி எடுத்துச் சென்று உடலில் தேவையான பாகங்களுக்கு அளிக்கிறது. ஆக்சிஜன் இல்லாவிட்டால் சத்துப் பொருட்களிலிருந்து ஆக்சிஜனேற்றம் மூலம் ஆற்றலைப் பெறமுடியாது. மேலும் அப்போது கிடைக்கும் கார்பன் மோனாக்சைடை வெளியேற்றவும் இது துணை செய்கிறது. ஹிமோகுளோபினில் உள்ள இரும்பு அணுவோடு இந்த கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனை விட 200 மடங்கு வலுவாக இணைந்து கொள்வதால் இது இயலுவதாகின்றது. கார்பன் மோனாக்சைடு நஞ்சாக இருப்பதற்கு இதுவே காரணமாயிருக்கிறது. வெளியில் ஹிமோகுளோபின் கார்பன் மோனாக்சைடுடன் தெவிட்டி விடுவதால் ஆக்சிஜனைக் கடத்தி எடுத்துச் செல்ல ஹிமோகுளோபின் முனைவதில்லை.
* பலவிதமான இரும்புச் சேர்மங்கள் பல்வேறு விதமாகப் பயன்படுகின்றன. பெரிக் ஆக்சைடு சிவப்பு நிறமியாக வண்ணங்களில் பயன்படுகிறது. பரப்பை மெருகூட்டவும், இரத்தினக் கற்களை பளபளப்பூட்டவும் இதைக் கையாளுகின்றார்கள் பெரிக் குளோரைடு உறைந்து கட்டியாகி இரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்த பயன்படுகின்றது. பெரஸ் சல்பேட் என்பது நீர்த்த கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட இரும்பாகும் இது மை தயாரிப்பதற்கும் [[தோல் பதப்படுத்தல்|தோல் பதனிடுவதற்கும்]] சாயப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றது ,
* இரும்பின் அனுக்கருவே அதிகமான பினைவாற்றல் வீதத்தைப் பெற்றுள்ளது. அதனால் பிற எளிய மற்றும் கனமான அணுக்களின் அணுக்கருக்களை விட இரும்பு நிலைப்புத் தன்மை மிக்கது எனலாம். விண்மீன்களில் உயர் வெப்ப நிலையில் நிகழும் அணுக் கருப்பிணைப்பு வினைகள் அதற்கு ஆற்றல் மூலமாய் இருக்கின்றன .இந்த வினை, பிணைந்து விளையும் அணுக்கரு இரும்பாய் இருக்குமட்டும் தொடர்கிறது. அதாவது ஒரு விண்மீன் இரும்பாய் தொகுப்பாக்கம் செய்யப்படும் வரை ஆற்றலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அது அழியத் தொடங்குகிறது
|