"ஒலியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (new key for Category:ஒலியியல்: " " using HotCat)
சி (பராமரிப்பு using AWB)
 
'''ஒலியியல்''' (Acoustics) என்பது, [[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]] ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் [[அதிர்வு]]கள், [[ஒலி]], [[மீயொலி]], [[அகவொலி]] என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். [[ஒலியியல் தொழில்நுட்பம்|ஒலியியல் தொழில்நுட்பத்துறை]] வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
 
கேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது [[இசை]], [[மருத்துவம்]], [[கட்டிடக்கலை]], [[கைத்தொழில் உற்பத்தி]], [[போர்]] போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது.
 
==ஒலியியலின் அடிப்படைக் கருத்துருக்கள்==
ஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன.
 
::[[File:Cause-effect diagram for acoustics-ta.png|600px|med| அடிப்படையான ஒலியியல் வழிமுறை]]
மேலுள்ள படம் ஒலியியல் நிகழ்வு அல்லது வழிமுறை ஒன்றின் படிமுறைகளைக் காட்டுகிறது. ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒலியலைகளின் பரவுகையை விளக்குவதற்கு ஒரு அடிப்படையான [[சமன்பாடு]] உண்டு. ஆனால், இதிலிருந்து உருவாகும் தோற்றப்பாடுகள் பலவாறானவையாகவும், பெரும்பாலும் சிக்கலானவையாகவும் உள்ளன. ஒலியலைகள் அவற்றைக் கடத்தும் ஊடகங்களினூடாக [[ஆற்றல்|ஆற்றலை]] எடுத்துச் செல்கின்றன. இவ்வாற்றல் இறுதியில் வேறு வடிவங்களிலான ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. இம்மாற்றமும் இயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவோ இருக்கலாம். ஒரு [[புவியதிர்வு]], எதிரிக் [[கப்பல்]]களைக் கண்டுபிடிக்க [[நீர்மூழ்கிக் கப்பல்]]கள் ஒலியலைகளைப் பயன்படுத்துதல், ஒரு [[இசைக்குழு]]வின் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவொரு நிகழ்விலும் முன்னர் குறிப்பிட்ட 5 படிமுறைகள் இருப்பதைக் காண முடியும்.
 
ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. [[பாய்மம்|பாய்மங்களில்]], அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை [[நெடுக்கலை]], [[குறுக்கலை]] அல்லது [[மேற்பரப்பலை]] ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.
 
ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. [[பாய்மம்|பாய்மங்களில்]], அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை [[நெடுக்கலை]], [[குறுக்கலை]] அல்லது [[மேற்பரப்பலை]] ஆகிய வடிவங்களில் அமையக்கூடும்.
 
===அலை பரவுகை: அழுத்த மட்டங்கள்===
 
ஒலி தொடர்பில் முழு அலைமாலையையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவை செவிப்புல ஒலி, மீயொலி, அகவொலி என்பன. செவிப்புல ஒலிகள் எனப்படும் மனிதச் செவிகளால் உணரக்கூடிய ஒலிகள் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண் எல்லையுள் அடங்குவன. இவ்வெல்லையுள் அடங்கும் செவிப்புல ஒலிகள் பேச்சுத் தொடர்பு, இசை போன்றவற்றில் பயன்படுகின்றன. மீயொலி எனப்படுவது 20,000 ஹெர்ட்ஸ்களுக்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியாகும். இவ்வொலி உயர் [[பிரிதிறன்]] (resolution) கொண்ட படமாக்கல் நுட்பங்களிலும், பல வகையான மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. குறைவான அதிர்வெண்களைக் கொண்ட அகவொலிகள் புவியதிர்ச்சி போன்ற [[நிலவியல்]] தோற்றப்பாடுகளை ஆய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன.
 
 
 
 
 
[[பகுப்பு:ஒலியியல்| ]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740243" இருந்து மீள்விக்கப்பட்டது