"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
== நிலவியல் ==
 
சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியத்தரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும்.
 
பல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு [[கேடய எரிமலை]] ஆகும்.
 
சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது.
நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது.
 
வடக்கு சகாரா என்பது எகிப்தில் [[மத்தியதரைக் கடல்]] மற்றும் [[லிபியா|லிபியாவின்]] பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. <ref name=Walton2007>{{cite book|author=Walton, K.|year=2007|title=The Arid Zones|publisher=Aldine|asin=B008MR69VM}}</ref>
 
பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). <ref name="Walton2007"/>
 
சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான [[நுவாக்சூத்]], அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும்.
==மக்களும் மொழிகளும்==
[[File:Arabslavers.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டில், வணிகத்தில் கறுப்பு நிற ஆப்பிரிக்க அடிமைகளை சகாராவினூடாக இடம்மாற்றும் ஒரு படம்]] caravan transporting black African slaves across the Sahara.]]
சகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன.
 
 
 
==படங்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740259" இருந்து மீள்விக்கப்பட்டது