மின் விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Gluehlampe 01 KMJ.jpg|thumb|200px|வெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் நுண்ணிழையும். தொமஸ் அல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டது. குமிழைச் சடத்துவ வாயு ஒன்றினால் நிரப்புவது மூலம் ஒளிக்குமிழின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கண்டறிந்த இர்விங் லாங்முயிர் என்பவர் இக் குமிழ்களை மேலும் சீரமைத்தார்.]]
 
[[மின்சாரம்|மின்சாரத்தைப்]] பயன்படுத்தி [[ஒளி|ஒளித்]] தேவைக்காக ஒளியை உருவாக்கும் [[சாதனம்|சாதனமே]] '''மின் விளக்கு''' ஆகும். மின் விளக்கின் கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். மனிதனுடைய செயற்பாடுகளுக்காகக் கிடைக்கக்கூடிய [[நேரம்|நேரத்தை]] இரண்டு மடங்காக ஆக்கிய பெருமை மின்விளக்குகளுக்கே உரியது.
 
==வரலாறு==
மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே [[ஹம்பிரி டேவி]] என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், [[மின் முனை|மின் முனைகள்]] மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. [[ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல்]] என்பவர், மின்சாரம் ஒரு [[மின்தடை|மின்தடையுள்ள]] கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் [[வெப்பம்|வெப்பசக்தி]] மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான [[நுண்ணிழை|நுண்ணிழைகளைச்]] செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த [[சேர் ஜோசப் வில்சன் ஸ்வான்]] என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய [[வெற்றிடம்|வெற்றிடத்தை]] நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் [[காபன்]] நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை [[தொமஸ் அல்வா எடிசன்|தொமஸ் அல்வா எடிசனுக்குக்]] கிடைத்தது.
 
==மின் விளக்கின் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மின்_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது