குறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''குறியியல்''' (Semiotics) என்பது [[குறி (குறியியல்)|குறிகள்]] பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது குறிகளின் பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது (transmit) என்றும், எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பது பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். உலகிலுள்ள சிறியதும் பெரியதுமான [[உயிரினம்|உயிரினங்கள்]] எவ்வாறு தமக்கேயுரிய [[குறியீடு|குறியீடுகள்]] தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றுக்குத் தம்மை இசைவாக்கம் செய்து கொள்கின்றன என்பது பற்றியும் சில சமயம் குறியியலாளர்கள் அறிந்துகொள்ள முயல்கிறார்கள்.
 
== சொற்களின் வகைப்பாடு ==
குறியியலாளர்கள், [[குறி (குறியியல்)|குறிகளையும்]] (signs), குறி முறைமைகளையும் (sign systems), அவை தொடர்பான பொருள் (meaning) எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து வகைப்படுத்துகிறார்கள். இந்தக் குறிகளின் பொருள் காவிச்செல்லப்படும் வழிமுறையானது, தனிச் சத்தங்கள், அல்லது சொற்களை உருவாக்கப் பயன்படும் எழுத்துக்கள், உணர்வுகளை அல்லது மனப்போக்கை வெளிப்படுத்தும் உடலசைவுகள், சிலசமயங்களில் உடுக்கும் [[உடை]] என்பவை போன்ற குறியீடுகளில் (codes) தங்கியுள்ளது. ஏதாவது "ஒன்றை"க் குறிக்கும் ஒரு சொல்லை உருவாக்குவதற்கு, ஒரு [[சமுதாயம்]] தங்கள் மொழியிலுள்ள அதன் எளிமையான பொருள் விளக்கம் தொடர்பாகப் பொதுவான கருத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான சொல், குறிப்பிட்ட மொழியின் [[இலக்கணம்|இலக்கண]] அமைப்பு மற்றும் குறியீட்டு வரம்புகளுக்கு உட்பட்டே பொருள் விளக்கத்தைக் கொடுக்கின்றன. குறியீடுகள் (codes), பண்பாடொன்றின் விழுமியங்களை குறித்து நிற்பதுடன், வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும், பல வகையான உட்பொருள்களையும் கொடுக்க வல்லவையான உள்ளன.
குறியியலும், [[தகவல் தொடர்பு]]தொடர்புத் துறையும் (communication) பல அடிப்படைக் கருத்துருக்களைப் பொதுவாகக் கொண்டுள்ளதுடன் அவற்றின் ஆய்வுப் பரப்பும் பல இடங்களில் ஒன்றுடனொன்று பொருந்தி வரையறுக்கப்படாமல் உள்ளது. எனினும், குறியியல், "தொடர்பு" என்ற அம்சத்தைவிட குறிகளின் தனிச்சிறப்பாக்கம் என்பதற்குக் கூடிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொடர்புத் துறையிலிருந்து வேறுபடுகின்றது.
 
குறியியலானது [[மொழியியல்|மொழியியலுடன்]] எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு துறைகளும் ஒரேயிடத்திலிருந்தே ஆரம்பிக்கின்ற போதும், குறியியல், அனுபவம் சார்ந்த முறையில் ஆய்வை விரிவாகக் கையாண்டு, மொழியியல் சார்ந்த அம்சங்களையும், மொழியியல் சாராத அம்சங்களையும் இணைத்துப் பார்க்க முயல்கிறது. மனிதர்கள் மொழியைச் சமுதாயச் சூழலில் மட்டுமே விளங்கிக் கொள்வதனால், இம்முறையில் ஆய்வு முடிவுகள் கூடிய அளவு பொருத்தமாக அமையும். தூய மொழியியலில் ஆய்வாளர்கள், மொழியைக் கூறுகளாகப் பிரித்து அதன் பயன்பாடு பற்றி ஆராய்கிறார்கள். ஆனால் உலக நடப்பில், மனிதர்களுக்கிடையேயான தொடர்பு நடவடிக்கைகளில், [[மொழி]] மற்றும் குறி அடைப்படையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்பில் குழப்பமான தெளிவின்மை காணப்படுகிறது. இது பற்றியும் குறியியலாளர்கள் பகுப்பாய்வு செய்து அவை தொடர்பான விதிகளைக் காணவும் முயல்கிறார்கள்.
 
== சில முக்கியமான குறியியலாளர்கள் ==
வரிசை 18:
* [[Juri Lotman]] [[1922]] - [[1993]]
+ அ. பழனிசாமி (தமிழ்த்திரைப்படங்களில் குறியியல்:1998)
 
 
== மேலும் படிக்க ==
"https://ta.wikipedia.org/wiki/குறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது