"ஈத்தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
{| class="toccolours" border="1" style="float: right; clear: right; margin: 0 0 1em 1em; width: 250px; border-collapse: collapse;"
! {{chembox header}} | ஈத்தேன்
|}
 
'''ஈத்தேன்''' ''(Ethane)'' என்பது C<sub>2</sub>H<sub>6</sub> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்களைக் குறிக்கிறது. இதை எத்தேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சாதாரணமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஈத்தேன் நிறமற்ற மணமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. பிற ஐதரோ கார்பன்கள் போல ஈத்தேனும் இயற்கை வாயுவிலிருந்து பேரளவில் தொழிற்சாலைகளில் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. பெட்ரோலியத்தை சுத்திகரிப்பு செய்யும் போது பெட்ரோ வேதிப்பொருள்களுடன் உடன் விளைபொருளாகவும் கிடைக்கிறது. [[எத்திலீன்]] உற்பத்திக்குப் பயன்படுத்துவது ஈத்தேனின் முதன்மையான பயனாகக் கருதப்படுகிறது.
 
கட்டமைப்பில் உள்ள ஓர் ஐதரசன் அணுவை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு அதற்குப் பதிலாக வேரு வேதி வினைக்குழுவை மாற்றீடு செய்து ஈத்தேனுடன் தொடர்புடைய பிற சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈத்தேன் சேர்மத்தின் ஒரு பகுதிக் கூறு எத்தில் குழு என்ற வேதி வினைக்குழுவாக கருதப்படுகிறது. உதாரணமாக ஓர் எத்தில் குழுவுடன் ஐதராக்சில் குழு இனைக்கப்பட்டால் அச்சேர்மத்தை [[எத்தனால்]] என்கிறோம். இது மதுபானங்களில் உள்ள ஆல்ககால் ஆகும்.
== வரலாறு ==
 
1834 ஆம் ஆண்டில் [[மைக்கேல் பரடே|மைக்கேல் பாரடே]] என்பவரால் ஈத்தேன் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. பொட்டாசியம் அசிட்டேட் கரைசலை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி இவர் ஈத்தேனைத் தயாரித்தார். இந்த வினையில் உருவான ஐதரோகார்பன் விளைபொருள் மீத்தேன் என்று இவர் தவறாகப் புரிந்து கொண்டார். இதனால் மேலும் இந்த சேர்மத்தை தொடர்ந்து ஆராயாமல் கைவிட்டார் <ref name=Faraday/>. 1847-1849 காலப்பகுதியில் கரிம வேதியியலின் இயங்குறுப்புத் தத்துவத்தை நிரூபிப்பதற்காக எர்மான் கோல்ப் மற்றும் எட்வர்ட்டு பிராங்க்லேண்டு ஆகியோர் எத்தில் சயனைடு <ref name=Kolbe/> மற்றும் எத்தில் அயோடைடுடன் <ref name=Frankland/> பொட்டாசியம் தனிமத்தைச் சேர்த்து ஒடுக்கமடையச் செய்து ஈத்தேனை உருவாக்கினர். இதற்கு அவர்கள் பாரடே செய்ததைப் போல நீரிய அசிட்டேட்டுகளை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தினர். இவர்களும் இவ்வினையில் விளைந்தது மீத்தேனின் இருபடியான ஈத்தேன் என்பதற்குப் பதிலாக மீத்தேன் என்றே தவறாகப் புரிந்து கொண்டனர். இப்பிஒழை 1864 இல் காரல் சிகோர்லெமர் என்பவரால் சரிசெய்யப்பட்டது. இவ்வினைகளில் வழியாக உருவானது ஈத்தேன் என்பதை இவர் எடுத்துக்காட்டினார் <ref>{{cite journal|doi=10.1002/jlac.18641320217|title=Ueber die Identität des Aethylwasserstoffs und des Methyls|journal=Annalen der Chemie und Pharmacie|volume=132|issue=2|pages=234|year=1864|last1=Schorlemmer|first1=Carl}}</ref>.
 
கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இருந்து ஈத்தேன் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. குடிக்கத்தக்க ஆல்ககால் (எத்தனால்) <ref>{{cite web|url=http://www.dictionary.com/browse/ethyl|title=the definition of ethyl|website=Dictionary.com|access-date=2016-03-12}}</ref> என்ற பொருள் கொண்ட செருமன் மொழிச் சொல்லிலிருந்து ’ஈத்’ பெறப்பட்டு, அதனுடன் கார்பன் அணுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றைப் பிணைப்பைக் குறிப்பிடும் ஏன் என்ற சொல்லையும் சேர்த்து ஈத்தேன் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
== பண்புகள் ==
* [http://www.aet.com/gtip1.htm Market-Driven Evolution of Gas Processing Technologies for NGLs]
* [http://wiki.jmol.org:81/index.php/User:Bduke Staggered and eclipsed ethane]
 
 
{{ஆல்கேன்கள்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740443" இருந்து மீள்விக்கப்பட்டது