"மணவை முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
|signature =
|}}
'''மணவை முஸ்தபா''' (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) [[அறிவியல் தமிழ்]] வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-08-20-14-34-38/06-sp-770218536/10558-2010-08-22-02-51-56 | title=அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் நேர்காணல் | publisher=keetru.com | date=04 ஜூலை 2006 | accessdate=7 பெப்ரவரி 2017}}</ref> [[அறிவியல்]], தொழில்நுட்பம், மருத்துவம், [[கணினி]] துறைச் சார்ந்த 8 கலைச் சொல் [[அகராதி]]களை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியரின்]] தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். [[அறிவியல் தமிழ் அறக்கட்டளை]] என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/அறிவியல்-தமிழை-ஆக்கபூர்வமாய்-பயன்படுத்தினால்-உலகின்-கவனம்-தமிழர்கள்-பக்கம்-திரும்பும்-அறிவியல்-தமிழறிஞர்-மணவை-முஸ்தபா-சிறப்புப்-பேட்டி/article7357287.ece | title=அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும் | publisher=http://tamil.thehindu.com | date=June 26, 2015 | accessdate=6 பெப்ரவரி 2017 | author=மு.முருகேஷ்}}</ref>
 
இவர் எழுதிய ''இசுலாமும் சமய நல்லிணக்கமும்'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ''மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996|1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. ''அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. ''கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி'' நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.
 
== ஆற்றிய பணிகள் ==
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், [[யுனெஸ்கோ கூரியர் தமிழ்|யுனெஸ்கோ கூரியர்]] - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா [[பிரிட்டானிகா]] தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார்.
 
திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் [[அறிவியல் தமிழ் மன்றம்|அறிவியல் தமிழ் மன்றத்தின்]] தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.
 
==எழுதிய நூல்கள்==
 
==பெற்ற விருதுகளும் சிறப்புகளும்==
[[கலைமாமணி]] விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994). 'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி [[ஜாகீர்உசேன் கல்லூரி]] அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி [[குன்றக்குடி அடிகள் | குன்றக்குடி அடிகளாரால்]] வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் வழங்கப்பட்டது.
 
‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம் இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740502" இருந்து மீள்விக்கப்பட்டது