இலங்கை வரலாற்றுக் காலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
* [[மகிந்த ராஜபக்ச|மகிந்த]] அரசின் [[போர்ப் பிரகடனம்]] - (2008 ஜனவரி 03ம் திகதி மகிந்த அரசு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக முறிக்கப்பட்டது. மகிந்த அரசு இனவாதத்தை வெளிப்படுத்தி போரைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தின் மீது முழு அளவிலான போரை முன்னெடுத்தது.
 
* [[வடக்கு கிழக்கு மாகாணம் பிரிப்பு]] - ( 2007இல் மகிந்த அரசினால் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது.
 
* [[இருசுற்றுப் பேச்சுவார்த்தை]] - (2005ம் ஆண்டு டிசம்பர் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசுடன் 2006ல் இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கை அரசு வாக்குறுதிகள் நிறைவேற்றாத நிலையில் பேச்சுவார்த்தை முறிவுற்றது.
 
* '''பொதுக்கட்டமைப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை''' - (15.07.2005 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே ஏற்பட்ட பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு இலங்கை அரசின் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்தது.
 
* [[ஆழிப்பேரலை]] பொதுக் கட்டமைப்பில் ஒப்பந்தம் - (24.06.2005 ஆழிப் பேரலை மீளமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் இலங்கை அரசும் கையெழுத்திட்டனர்.
 
* '''தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள்''' - (02.04.2004 தேர்தலில் தமிழ்த் தேசியம் வெற்றி பெற்றது
இத்தேர்தலில் தமிழர் தரப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே அணியில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என போட்டியிட்டு 90 சதவீதமான வாக்குகளைப் பெற்று விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நிரூபித்தது. தமிழ்த் தேசியக் கட்டமைப்பில் 22 தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டனர்.
 
* [[6 சுற்றுப் பேச்சு வார்த்தை]] - புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் [[தாய்லாந்து]], [[ஜேர்மனி]], [[யப்பான்]], [[ஒஸ்லோ]] ஆகிய இடங்களில் 6 சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் 31.10.2004 அன்று [[இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபு]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] ரணில் அரசிடம் கையளிக்கப்பட்டு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 07.02.2004 அன்று சந்திரிகாவால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனால் பேச்சு வார்த்தை குழப்பமுற்றது.
 
* '''யுத்த நிறுத்தம் அறிவிப்பு''' - (2001 டிசம்பர் 24ம் திகதி ஒருதலைப்பட்சமான ஒரு மாத யுத்த நிறுத்தத்தினை விடுதலைப்புலிகள் அறிவித்தனர் அதனைத் தொடர்ந்து அதே நாளில் இருந்து ஒரு மாத மோதல் தவிர்ப்பை அரசாங்கம் அறிவித்தது. இதனை இரு தரப்பினரும் கடைப்பிடித்தனர் இதன் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] மற்றும் இலங்கை அரசு தரப்பில் [[ரணில் விக்கிரமசிங்கா|ரணில் விக்கிரமசிங்காவும்]] 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்று பெப்ரவரி 23 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.
 
* '''1983 முதல் 1995 வரை கலவரத்தின் அழிவுகளின் மதிப்பீடு''' - சிங்களவர்களான [[எஸ். டபிள்யூ]], [[ஆர். டி. ஏ. சமரசிங்கா|ஆர். டி. ஏ. சமரசிங்கவும்]] ஜரோப்பியரான ஜோன் எம் ரிச்சட்சனும் சேர்ந்து வெளியிட்ட ஆய்வொன்றின் படி 1983 யூன் மாதத்திலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அழிவின் மதிப்பீடு 23,000 மில்லியன் ரூபா. 1983 ஆடி இனக்கொலைகளின் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 1995 ஆம் ஆண்டு வரை பொருளாதார வளங்கள் அழிக்கப்பட்டன. 1983 முதல் 1987 வரை வடக்கு கிழக்கில் 69,400 வீடுகள் முற்றாக அழித்தும் 30,000 வீடுகளை சேதப்படுத்தியும் வந்த இலங்கை அரசு இதனை தொடர்ச்சியான நிகழ்ச்சியாகக் கொண்டு 1995இல் யாழ்ப்பாணத்திலும் குடாநாட்டிலும் நூறாயிரக் கணக்கான வீடுகள், கடைகள் போன்றனவற்றை இடித்துத் தள்ளியுள்ளனர் .
 
* [[2978 பயங்கரவாத தடைச் சட்டம்]] - (1977ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் [[இலங்கை அரசு|இலங்கை அரசாங்கம்]] [[தமிழர்|தமிழர்களின்]] சட்டபூர்வமான குடியொப்ப முடிவையும் செயற்படும் முறைபற்றிய முன்னறிவிப்பையும் ஏற்கமறுத்து அத்துடன் 2978 பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் 1983ல் அரச ஆதரவுடனான இன அழிப்பு ஒன்றை கொழும்பில் நடத்தி தமிழர்களின் பொருளாதார வளங்கள் அழிக்கப்பட்டன. 1978 முதல் 1983 வரை வடக்கு கிழக்கு மாகாணங்களான தமிழர் தாயகத்தில் [[இலங்கை அரசின் ஆயுத படைகள்]] மூலம் இன அழிப்பு நடைபெற்றது.
 
* [[தமிழீழம்]] மலர ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என தமிழர்கள் அறிவிப்பு - (1977ம் ஆண்டு குடியொப்ப அங்கீகாரம் கோரியபொழுது அத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தமிழீழ அரசை மீள இயக்க வைப்பதற்கு சனநாயக வழிகளிலோ, நேரடிப் போராட்டங்களினாலோ அடையாமுடியாவிடில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடைவர் எனத் தெளிவாக தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் அகில உலகிற்கும் தெரிவித்தனர்.
 
* [[தமிழீழம்]] மீளமைக்க முயற்சி - (1975ம் ஆண்டு சுயநிர்ண உரிமையினை பிரகடனப்படுத்தி 1976ம் ஆண்டு தமிழீழத் தேசத்தை மீளவும் அமைக்க உறுதி பூண்டு 1977ம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் குடியொப்ப அங்கீகரிப்பும் பெற சட்டபூர்வமான முறையில் தமிழீழ தேசத்தினை மீள அமைக்க முற்பட்டனர்.
 
* [[கோல்புறூக் சட்டம்]] செல்லுபடியற்றதாகியது - (1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி [[சோல்பரி அரசியல் அமைப்பு]] இல்லாது ஒழிக்கப்பட்ட போது 1833ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி தமிழீழத்தை சிறிலங்காவுடன் இணைத்து "சிலோன்" என்ற அரசு உருவாக்க அதிகாரம் அழித்த கோல்புறூக் சட்டம் செல்லுபடியற்ற சட்டமாகியது. [[டொனமூர் அரசியல் அமைப்புச் சட்டம்]] மற்றும் [[சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டம்]] ஆகியன கோல்புறூக் சட்டத்தினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோல்புரிச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் தமிழீழத்தினை சிறிலங்காவுடன் இணைத்த சட்டமும் செல்லுபடியற்றதானது. இதன்மூலம் சிறிலங்கா அரசுக்கு தமிழீழத்தினை ஆட்சி செய்யும் உரிமை, புதிதாக பிரகடனப் படுத்திய குடியரசு யாப்பின் அதிகாரங்களை தமிழீழப் பிரதேசத்தில் உபயோகிக்கும் உரிமை ஆகியனவற்றை இழந்தது.
 
* '''ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் உருவாக்கம்''' - (1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கையினை சுதந்திரமான உரிமை கொண்ட தன்னாதிக்கம் உள்ள ஒரு குடியரசாதல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன்மூலம் "ஒற்றையாட்சி இலங்கை" என்ற சோல்பரிப் பிரபுவின் அரசியலமைப்புச் செல்லுபடியற்ற தாக்கப்பட்டு "சிலோன்" என்ற பெயரும் இல்லாதொழிக்கப்பட்டு "சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு "சிலோன்" என்ற அரசிடமிருந்து பூரண விடுதலை பெற்று குடியரசாகியது.
 
* [[இலங்கை|இலங்கையினை]] தன்னாதிக்கம் உள்ள குடியரசாக்க தீர்மானம் - (1971ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி இலங்கையினை சுதந்திரமான உரிமை கொண்ட தன்னாதிக்கம் உள்ள ஒரு குடியரசாதல் வேண்டும் என்ற தீர்மானம் பாராளுமன்றத்தில் பிரதமர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ பண்டாரநாயக்காவினால்]] முன்மொழியப்பட்டது.
 
* '''குடியரசாக மாற்றுவதற்கான பிரகடன அறிவிப்பு''' - (1970ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் பிரித்தானிய முடியாட்சியில் இருந்து முழுமையாக சுதந்திரம் பெற்ற ஒரு நாடாக குடியரசாக மாற்றுவதற்கான பிரகடனத்தினை கொழும்பு நவரங்கலா மண்டபத்தில் அதிகாரபூர்வமான கூட்டம் ஒன்றை கூட்டினார் சிறிமாவோ பண்டாரநாயக்கா. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் என 1700 வரையிலானவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
 
* '''இலங்கையினைக் குடியரசாக்க வாக்கெடுப்பு''' - (1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற இருந்த பொதுத்தேர்தலில் தம் கட்சி வெற்றி பெற்றால் இலங்கையினைக் குடியரசாக மாற்றுவோம் என சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்தது மேலும் அத்தேர்தலை அதற்கான அங்கீகாரத்தினை அழங்கும் ஒரு சர்வசன வாக்கெடுப்பாகவும் பிரகடனப்படுத்தியது.)
 
* '''சிங்களவர்களின் தேசிய துக்கதினம்''' - (1966ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி) இத்தினத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் அணியிலிருந்து இடதுசாரிகள் உட்பட சிங்களவர்களின் துக்க தினமாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடி ஏந்தி சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் [[துட்டகைமுனு|துட்டகைமுனுவின்]] தாயாரான [[விகாரமா தேவி|விகாரமா த்தேவியின்]] சிலை முன் சிங்கள இனத்தினைக் காப்போம் என [[சத்தியப் பிரமாணம்]] செய்து பின் "பறத்தெமிழ அப்பிட்ட எப்பா" "மசால வடை அப்பிட்ட எப்பா" என தமிழர்களை இழிவு செய்யும் கோசங்களை எழுப்பிக்கொண்டு பாராளுமன்றத்தினை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். இச்சம்பவத்தையடுத்து [[டட்லி சேனநாயக்கா]] [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வநாயகத்துடன்]] செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்து எறிவதாக அறிவித்தார்.
 
* [[டட்லி சேனநாயக்கா|டட்லி]] [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வா]] ஒப்பந்தம் - (1965ம் ஆண்டிற்கு முன்னர் வந்த டட்லி சேனநாயக்கா பண்டாரநாயக்காவைப் போல தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவது தொடர்பாக எஸ். ஜே. வி. செல்வநாயக்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார். இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து 1965ம் ஆண்டு மே தினம் [[இலங்கை சுதந்திரக் கட்சி|இலங்கை சுதந்திரக் கட்சியும்]] சிங்கள இடதுசாரிக் கட்சி|சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
* '''சிங்கள மொழிப் பிரயோகச் சட்டத்தினை எதிர்த்துப் போராட்டம்''' - (1961ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிறிமாவோ அரசாங்கம் நிறைவேற்றிய நீதிமன்றங்களில் சிங்கள மொழிப் பிரயோகம் பற்றிய சட்டத்தினை எதிர்த்து யாழ் கச்சேரி வாசலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தினர். வவுனியா, மன்னார், திருகோணமலை பிரதேசங்களுக்கும் விரிவாக்கப்பட்ட இப்போராட்டம் இராணுவ வன்முறை கொண்டு அடக்கப்பட்டது மட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்களுக்கு தார்பூசி அழிக்கும் இயக்கம் சிங்களப் பகுதியில் ஆரம்பித்தது.
 
* [[தமிழர்|தமிழருக்கெதிரான]] இனக்கலவரம் - (1958ம் ஆண்டு வைகாசி மாதம் 23ம் திகதி தமிழருக்கெதிரான இனக்கலவரம் ஏற்பட்டு தென்பகுதி முழுதும் [[தமிழர்|தமிழர்கள்]] தாக்கப்பட்டனர், வெட்டிக்கொல்லப்படனர், உயிருடன் எரிக்கப்பட்டனர், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். 12,000 தமிழர்கள் அகதிகளாகவும் பாதுகாப்புக் கருதி பலர் [[யாழ்ப்பாணம்|யாழ் குடா]] நாட்டில் உள்ள [[பருத்தித்துறை துறைமுகம்|பருத்தித்துறை துறைமுகத்திற்கு]] அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் தொகை ஆயிரத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
* '''ஒப்பந்தம் கைவிடப்பட்டது''' - (1958ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன்]] செய்த ஒப்பந்தத்தினை கைவிட்டு விட்டதாக [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] அறிவித்தார்.
 
* [[கண்டி பாத யாத்திரை|கண்டிக்கு பாத யாத்திரை]] - (1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]] தலமையில் [[பௌத்த பிக்கு|பௌத்த பிக்குகள்]] உட்பட [[சிங்கள் இனவாதி|சிங்கள இனவாதிகள்]] பாத யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்கள்.
 
* [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்|செல்வநாயகத்துடன்]] ஒப்பந்தம் - (1957ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி)
 
* '''தனிச் சிங்களச் சட்ட எதிர்ப்பு''' - (1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி [[தனிச் சிங்களச் சட்டம்|தனிச் சிங்களச் சட்டத்தினை]] எதிர்த்து [[காலி|காலித்திடலில்]] [[சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகப் போராட்டம்]] செய்த [[தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சியினர்]] சிங்களக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலை பாராளுமன்ற மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] தமிழர்கள் இப்போராட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தினைக் கைப்பற்றுவதற்கு வருகின்றனர் என சிங்கள இனவாதிகளிடம் திரித்த கதையின் காரணமாக [[கொழும்பு]] மற்றும் [[கல்லோயா]] பகுதிகளில் 150இற்கும் மேற்பட்ட [[தமிழர்|தமிழர்கள்]] கொல்லப்பட்டு பலரது வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
 
* '''ஆட்சிமொழியாக சிங்களம்''' - (1956ம் ஆண்டு யூன் மாதம் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால்]] சிங்கள மொழியினை ஆட்சி மொழியாக மாற்ற பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
 
* '''இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம்''' - (1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் 10 இலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையினைப் பறித்து அதன் மூலம் பாராளுமன்றத்தின் 7 தொகுதிகளுக்கு தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் உரிமையையும், 14 தொகுதிகளில் வெற்றியினைத் தீர்மானிக்கும் உரிமையையும் இழந்தார்கள்.
 
* [[இலங்கையின் தேசியக் கொடி]] - (1948 ஆம் ஆண்டு சிங்களவர்களின் தேசியக் கொடியான வாள் ஏந்திய சிங்கக் கொடியே இருக்க வேண்டும் என்ற தீர்மானம் [[தமிழர்|தமிழர்களினது]] எதிர்ப்புக்கு மத்தியில் [[டி. எஸ். சேனநாயக்கா]] அரசால் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
* '''குடியகல்வுச் சட்டம்''' - (1948 ஆகஸ்ட்)
 
* [[இலங்கை]] சுதந்திரம் - (1948 பிப்ரவரி 4 ஆம் திகதி) ஆங்கிலேயரிடமிருந்து சிங்களவரிடம் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
 
* [[சோல்பரி ஆணைக்குழு]] - (1944 ஆம் ஆண்டு பிரித்தானிய முடியாட்சியின் மேற்பார்வையில் [[இலங்கையர்|இலங்கையருக்கு]] சுதந்திரம் வழங்குவதற்காக சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
 
* '''சிங்களக் குடியேற்றத் திட்டங்கள்''' - (1931 ஆம் ஆண்டில் [[டி. எஸ். சேனநாயக்கா|டி. எஸ். சேனநாயக்காவினால்]] கல்லோய குடியேற்றத் திட்டம், கந்தளாய் அல்லைக் குடியேற்றம் போன்ற திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களான அப்பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
 
* [[யாழ்ப்பாண]] மக்களின் தேர்தல் புறக்கணிப்பு - (1931 ஆம் ஆண்டு டொன்மூர் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலை யாழ்ப்பாண மக்கள் புறக்கணித்தனர்.
 
* [[டொனமூர் ஆணைக்குழு]] - (1927 நவம்பர் மாதம் இலங்கை மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்குவதெனக் கூறிக்கொண்டு டொனமூர் ஆணைக்குழுவை பிரித்தானிய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
 
* [[சட்ட நிரூபண சபை]] - (1835ம் ஆண்டு இலங்கையின் முதலாவது சட்ட நிரூபண சபை உருவாக்கப்பட்டது. 1924 வரை இச்சபையில் [[தமிழர்|தமிழருக்கும்]], [[சிங்களவர்|சிங்களவருக்கும்]] சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது.
 
* [[சிலோன் அரசு]] உருவாக்கம் - (1833ம் ஆண்டு பிப்ரவரி 18ம் திகதி [[யாழ்ப்பாணம்]], [[கண்டி]], [[கோட்டை]] என தனித்தனியே இருந்த மூன்று அரசுகளையும் "சிலோன்" என்ற ஒரே அரசாக பிரித்தானிய அரசு இணைத்தது.
 
* [[கோல்புறூக் ஆணைக்குழு]] - (1832ஆம் ஆண்டு) பிரித்தானிய ஆட்சிமுறையினை இலங்கையில் அறிமுகம் செய்வதைக் கண்டறிய கோல்புறூக் ஆணைக்குழு இலங்கைக்கு வருகைதந்தது.இவ்வாணைக்குழு மக்களின் தேவைகள், வரலாற்று உரிமைகள் என்பவற்றை கணக்கில் எடுக்காது பிரித்தானிய காலனித்துவ அரசின் தேவையை கணக்கில் எடுத்து இலங்கையினை ஒரே ஆட்சி முறையின் கீழ் கொண்டு வர வழி வகுத்தது.
 
* [[ஆங்கிலேயரின் கண்டி மீதான ஆக்கிரமிப்பு]] - (1815 மார்ச் 2ம் திகதி கண்டிய சிங்களவர்கள் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர் கண்டிய மன்னன் கைது செய்யப்பட்டான். இவன் 1836 சனவரி 30இல் தமிழக வேலூர் சிறையில் காலமானான்.
 
* [[சிறிவிக்கிரம இராஜசிங்கன்]] - (கி.பி. ? முதல் 1815 மார்ச் 2ம் திகதி வரை) [[நாயக்கர்|நாயக்க]] வம்சாவளியில் வந்த இத்தமிழ்மன்னன் [[கண்டி|கண்டியினை]] ஆட்சி செய்துவந்தான்.
 
* [[குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்]] - (1803 முதல் 1811 இறக்கும் வரை) ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு வந்தான் [[வன்னி|வன்னியின்]] இறுதி மன்னனான குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
 
* [[ஆங்கிலேயர்]] ஆக்கிரமிப்பு - (கி.பி. 1795 ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி [[திருகோணமலை|திருகோணமலையையும்]] அக்டோபர் 5ம் திகதி [[மட்டக்களப்பு]], [[மன்னார்]], யாழ்ப்பாணப்பிரதேசங்கள் போன்றனவற்றை [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடமிருந்து]] ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்டனர்.)
 
* [[ஒல்லாந்தர்]] ஆக்கிரமிப்பு - (கி.பி. 1638இல் [[மட்டக்களப்பு]] பின்னர் கி.பி. 1658இல் [[யாழ்ப்பாணம்]]) ஆகியனவற்றை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயர்களிடம்]] இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிக் கொண்டனர்.
 
* [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பு]] - (கி.பி. 1619 யூன் மாதம் 5ம் திகதி முதல் 1658 வரை) யாழ்ப்பாண இராச்சியம்
போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. இதேகாலத்தில் வன்னிய சிற்றரசுகள் சில சுயாதீன அரசுகளாக இருந்தன.
வரி 98 ⟶ 57:
**[[மாகோன்]] - (கி.பி. 1215 - 1255 ஆட்சிக்காலம்) - கிழக்குப்பிரதேசம் (மகாவம்சக் குறிப்பு)
*[[ஆறாம் விஜயபாகு]] - (கி.பி. 1397 - 1409 ஆட்சிக்காலம்)
 
* [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசின்]] இலங்கை ஆட்சி - (கி.பி. 1356 - 1374) [[சிங்கள அரசுகள்]], [[கோட்டை]], [[கண்டி]] என இரண்டாகப் பிரிந்திருந்த காலப் பகுதியில் [[சிங்கை நகர்|சிங்கை நகரைத்]] தலைநகராகக் கொண்ட [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசும்]], [[வன்னிய அரசு|வன்னிய அரசும்]] தொடர்ந்து வலிமையுடன் விளங்கிய இக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் நிர்வாகத்தில் முழு இலங்கையும் இருந்தது.
 
*[[ஐந்தாம் விஜயபாகு]] - (கி.பி. 1335 - 1347 ஆட்சிக்காலம்)
*[[நான்காம் விஜயபாகு]] - (கி.பி. 1271 - 1273 ஆட்சிக்காலம்)
வரி 106 ⟶ 63:
*[[இரண்டாம் விஜயபாகு]] - (கி.பி. 1186 - 1187 ஆட்சிக்காலம்)
*[[முதலாம் விஜயபாகு]] - (கி.பி. 1055 - 1110 ஆட்சிக்காலம்)
 
* [[பொலநறுவை ஆட்சி]] - (கி.பி. 10 - 14) இக்காலத்தில் [[சிங்கை நகர்|சிங்கை நகரைத்]] தலைநகராகக் கொண்ட [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசும்]], [[மட்டக்களப்பு]], [[திருமலை]], வன்னிப் பிரதேசங்களை உள்ளடக்கிய [[வன்னிய சிற்றரசு|வன்னிய சிற்றரசுகளும்]] [[தமிழர்|தமிழர்களுடைய]] அரசுகளாக விளங்கின.
 
*[[சோழர்|சோழர்கள்]] - (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள். இவர்கள் ஆட்சிக்காலத்தில் [[அநுராதபுரம்]] அழிக்கப்பட்டது.
 
**[[குளக்கோட்டன்]] - (கி.பி. 1223 - 1260 ஆட்சிக்காலம்) கிழக்குப்பிரதேசம் (மகாவம்சக் குறிப்பு)
 
== கி.மு ==
* [[சிங்களவர்|சிங்கள]] இனத்தின் [[பொற்காலம்]] - (கி.மு.2 - கி. பி. 7 அநுராதபுர ஆட்சிக் காலம்). இக்காலகட்டத்தில் [[கதிரமலை|கதிரமலையினைத்]] (கந்தரோடை) தலைநகராகக்கொண்ட [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண அரசு]] அநுராதபுர அரசுக்கு நிகரான பலம் பொருந்திய அரசாக விளங்கியது என [[கந்தரோடை புதைபொருள் ஆய்வுகள்]] விளக்குகின்றன.
 
* [[எல்லாளன்]] - (கி.மு 205 முதல் கி.மு 161 ஆட்சிக்காலம்) - தமிழன்
 
* [[மூன்றாவது கடற்கோள்]] (கி.மு. 306) - [[இலங்கை|இலங்கைக்குப்]] பாரிய அழிவு ([[டெனற்]] என்பவரின் கூற்று) [[திருக்கோணேச்சரம்|கோணேசர்]] ஆலயம் இக்காலகட்டத்தில் அழிவிற்குட்பட்டிருக்கலாம்.
 
* [[கதிர்காம சத்திரியர்கள்]] - (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
 
* [[விஜயன்]] - (கி.மு. 543) - [[ஆரியர்|ஆரிய]] மன்னனான இவன் தனது தோழர்களுடன் இலங்கை வந்தான். இவன் இலங்கைக்கு வரும் காலத்திற்கு முன்னரே [[வடக்கு|வடக்கிலும்]], [[கிழக்கு|கிழக்கிலும்]], [[தெற்கு|தெற்கிலும்]] தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழ் அரசுகள் இவன் காலத்திற்கு முன்னரே இருந்ததன் சான்றாக திராவிட தொல் பொருள் சின்னங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
* [[இரண்டாவது கடற்கோள்]] - (கி.மு. 504) ([[டெனற்]] என்பவரின் கூற்று)
 
* [[முதலாவது கடற்கோள்]] - (கி.மு. 2378) இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது ([[டெனற்]] என்பவரின் கூற்று)
 
* [[கடற்கோள்]] - (கி,மு. 3544) (w.பாலேந்திரா கூற்று) [[திருக்கோணேச்சரம்|கோணேசர்]] ஆலயம் அழிவுற்றது, இராமாயாண காலத்தின் பின்னர் பாரிய கடற்கோள் ஏற்பட்டதென "[[இராசாவலிய]]" என்ற [[பாளி மொழி]] வரலாற்று நூல் கூறுகின்றது.
 
* [[திருக்கோணேச்சரம்|கோணேசர் கோவில்]] - (கி.மு. 3541) கட்டப்பெற்றது என்பது குல. சபாநாதன் என்பவரின் கருத்து.
 
* [[இராவணன்]] - (கி.மு. 6000?) - [[இராமாயணம்|இராமாயணக்]] கதாபாத்திரம்
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வரலாற்றுக்_காலக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது