இற்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பண்புகள்: பராமரிப்பு using AWB
 
வரிசை 16:
== பண்புகள் ==
இட்ரியம் ஒரு மென்மையான வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்ட ஒரு தனிமமாகும். நெடுங்குழு 3 இல் உள்ள தனிமங்களில் உயர் படிகத்தன்மை கொண்டு பளபளப்புடன் காணப்படுகிறது. ஆவர்த்தனப் போக்குகளின்படி இதன் முன்னோடியான இதே குழுவைச் சேர்ந்த இசுக்காண்டியத்தைக் காட்டிலும் மின்னெதிர் தன்மை குறைவாகவும், 5 ஆவது தொடரில் உள்ள அடுத்த தனிமமான சிர்க்கோனியத்தைக் காட்டிலும் குறைவான மின்னெதிர்தன்மை தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. மேலும் இதே குழுவைச் சேர்ந்த இதன் அடுத்த தனிமமான இலந்தனத்தைக் காட்டிலும் அதிக மின்னெதிர் தன்மை கொண்டும் இருக்கிறது. லாந்தனைடு குறுக்கம் காரணமாக மற்ற லாந்தனைடுகளுடன் மின்னெதிர் தன்மையில் நெருக்கமாக உள்ளது. டி தொகுதியைச் சேர்ந்த முதலாவது 5 ஆவது தொடர் தனிமம் இட்ரியம் ஆகும்.
Y2O3 என்ற பாதுகாப்பு அடுக்கு உருவாதல் காரணமாக தூய்மையான இட்ரியம் நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. இப்பாதுகாப்பு அடுக்கைச் 750 பாகை செல்சியசு வெப்ப நிலைக்குச் சூடாக்கும் போது இப்படலம் 10  µm அளவை அடைகிறது. பொதுவாக இறுதியாகப் பிரித்தெடுக்கப்படும் இட்ரியம் காற்றில் நிலைப்புத் தன்மை அற்றதாகவும், இதன் துருவல்கள் அல்லது சீவல்கள் 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது தீப்பற்றி எரிகிறது. நைட்ரசனுடன் சேர்த்து 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இட்ரியம் நைட்ரைடு தோன்றுகிறது.
== லாந்தனைடுகளுடன் ஒற்றுமை ==
இட்ரியம் மற்றும் லாந்தனைடுகளுக்கு இடையில் ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுவதால் இதையும் அரு மண் உலோகம் என்ற வகைப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். இயற்கையில் அருமண் கனிமங்களுடன் எப்போதும் கலந்த நிலையில் இட்ரியமும் கிடைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இற்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது